இதனால தான் நீங்க தளபதி.. விஜய்யை பாராட்டிய ஷாருக்கான்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: நன்றி நண்பா.. இதனால தான் நீங்க தளபதி என பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் விஜய்க்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் நாளை வெளியாகிறது. அதனை முன்னிட்டு சிறப்பு காட்சி பிரபலங்களுக்காக இன்றே திரையிடப்பட உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்ட நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் இப்படியொரு ட்வீட்டை போட்டுள்ளார்.

ட்வீட் ப்ரமோஷன்
ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரா படத்துக்கு ராஜமெளலியை அழைத்துக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் பெரிய அளவில் ப்ரமோஷன் செய்தனர். ஆனால் வரும் ஜனவரி 25ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்திற்கு பெரிய ப்ரமோஷன் எல்லாம் செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னணி நடிகர்களை வைத்து ட்விட்டர் ப்ரமோஷனை செய்துள்ளார் ஷாருக்கான்.

4 மில்லியன் வியூஸ்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. பதான் படத்தின் இந்தி ட்ரெய்லர் 4 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்
இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வருகின்றனர். சமீபத்தில் அந்த படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதே போல விஜய்யின் தளபதி 67 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஷாருக்கானின் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டார்.

இதனால் தான் நீங்க தளபதி
ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ஷாருக்கான், "மிக்க நன்றி நண்பா! இதனால் தான் நீங்க தளபதி, கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என பதிவிட்டுள்ளார். அதே போல நடிகர் ராம்சரண், துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் ட்ரெய்லரை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியிட்ட நிலையில் அவர்களுக்கும் ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் குஷி
ஷாருக்கானே தளபதி விஜய் என சொல்லி உள்ள நிலையில், வாரிசு படத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் மாஸை பார்த்தீங்களா? என விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நாளை வெளியாக போகும் படங்களில் துணிவு படத்தை வாரிசு முந்தும் என வெறித்தனம் காட்டி வருகின்றனர்.

பிரத்யேக ப்ரீமியர்
ஷாலினி அஜித் சமீபத்தில் துணிவு படத்தின் ப்ரீமியர் காட்சியை கண்டு ரசித்தார். இந்நிலையில், பிரபலங்கள் பார்க்க பிரத்யேக ப்ரீமியர் காட்சி இன்று இரவு 8 மணிக்கு சத்யம் தியேட்டரில் ஒளிபரப்பாக உள்ளது. வாரிசு படத்தின் ப்ரீமியரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், பிரபு, சரத்குமார், ஷாம், குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











