அச்சச்சோ ஷாருக்கானுக்கு என்ன ஆச்சு? ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்!

மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு சர்வதேச அளவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படம் ஷாருக்கான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது.

Shah Rukh Khan met accident and injured in nose on shooting spot and done a minor surgery

இந்நிலையில், ஷாருக்கானுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக வெளியாகி உள்ள தகவல்கள் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

1000 கோடி வசூல்: பாலிவுட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் மீண்டும் ஹீரோவாக நடித்த ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது. வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

அமீர் கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான் என முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து மண்ணைக் கவ்வி வந்த நிலையில், பாலிவுட்டின் மீட்பராகவே ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி 1000 கோடி வசூலை இந்த ஆண்டு நிகழ்த்தி மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்: மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துடன் ஜவான் பட டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூக்கில் ரத்தம்: ஷாருக்கான் அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டன்கி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்து வருகிறார்.

Shah Rukh Khan met accident and injured in nose on shooting spot and done a minor surgery

சினிமா படங்களை தாண்டி விளம்பரப் படங்களிலும் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் திடீரென எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், நடிகர் ஷாருக்கானுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

ரசிகர்கள் வேதனை: முதலுதவி சிகிச்சை அளித்தும் ரத்தம் நிற்காத நிலையில், ஷாருக்கானை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள் மைனர் ஆபரேஷனை செய்து ரத்தத்தை நிறுத்தி உள்ளதாக கூறுகின்றனர். அதன் பின்னர் மும்பைக்குத் திரும்பிய ஷாருக்கான் தனது வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறாராம்.

நடிகர் ஷாருக்கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X