Just In
- 5 hrs ago
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- 6 hrs ago
ரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்!
- 7 hrs ago
ஆதித்ய அருணாச்சலம் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டரா? சீக்ரெட்டை போட்டுடை ஏஆர் முருகதாஸ்!
- 8 hrs ago
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
Don't Miss!
- Lifestyle
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- News
என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி
- Technology
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷாருக்கானின் அடுத்த படம் இவர் கூட தானாம்.. அப்போ அட்லி?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் அவருக்கு படு தோல்வியை கொடுத்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக எந்தவொரு புதிய படத்தையும் ஒப்பந்தம் செய்யாமல், பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த ஷாருக்கான், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 இடியட்ஸ் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் தோல்வி
பாலிவுட்டில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்து வந்த மூன்று கான் நடிகர்களில், முன்னணியில் இருந்து வந்த ஷாருக்கான், கடந்த சில ஆண்டுகளாக பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறார்.
அவர் பெரிதும் எதிர்பார்த்த ஃபேன் மற்றும் ஜீரோ படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய தோல்வி படங்களாக மாறிய நிலையில், அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்கும் முயற்சியில் ஷாருக்கான் இறங்கியுள்ளார்.

சங்கி
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சியை உற்றுநோக்கிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக செய்திகள் பரவின. சமீபத்தில் ஷாருக்கானின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் சங்கி எனும் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

வெற்றிமாறன்
அட்லியை போலவே வெற்றிமாறனிடமும் கதை கேட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் ஷாருக்கானை மிகவும் கவர்ந்ததாகவும், அந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகவும், அவர்கள் சம்மதிக்கும் போது படம் பண்ணுவேன் எனக் கூறியிருந்தார். ஷாருக்கான் படம் குறித்து எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை.

ஏப்ரல் மாதத்தில்
3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை பாலிவுட்டில் இயக்கியுள்ள ராஜ்குமார் ஹிரானி, இயக்கத்தில் தான் ஷாருக்கான் அடுத்த படம் நடிக்கவுள்ளாராம்.
2020 ஏப்ரலில் இந்த படம் தொடங்கவுள்ளதாகவும், ராஜ்குமார் ஹிரானிக்கு ஷாருக்கான் கால்ஷீட் வழங்கியுள்ளார் என்றும், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முன்னா பாய் எம்.பி.பி.எஸ் மற்றும் 3 இடியட்ஸ் படங்களில் ஷாருக்கான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.