படையப்பா மெட்டல் பெல்ட்.. ஜவானில் அட்லீ செஞ்ச தரமான சம்பவம்.. லீக்கான ஷாருக்கான் சண்டைக் காட்சி!
மும்பை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளன.
ஜனவரி 25ம் தேதி வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டி பாலிவுட்டில் பாகுபலி 2 படத்தின் வசூலையே பீட் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்நிலையில், ஜவான் படமும் அடுத்த 1000 கோடி சாதனையை செய்யும் என தற்போது லீக்கான சண்டைக் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

அட்லீ சம்பவம்
இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்த அட்லீ ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், முதல் படத்திலேயே வெயிட்டு காட்டினார். அதன் பின்னர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். அடுத்ததாக ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இன்னொரு 1000 கோடி
4 ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்காமல் இருந்து வந்த நிலையில், பாலிவுட் ரசிகர்களை அடுத்தடுத்து உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பதான், ஜவான் மற்றும் டன்கி என 3 பெரிய இயக்குநர்கள் படங்களில் கமிட் ஆனார். பதான் 1000 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அடுத்த 1000 கோடி வசூல் ஈட்டும் படமாக ஜவான் நிச்சயம் மாறும் என்பதை தற்போது கசிந்துள்ள காட்சிகளே உணர்த்துவதாக ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வயசான லுக்கில்
தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களிலேயே விஜய்யை ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு ஒரே படத்தில் பல படங்கள் பார்த்த ஃபீலிங்கை கொடுத்திருப்பார் அட்லீ. இந்நிலையில், ஷாருக்கான் இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து வரும் நிலையில், அவரது வயதான கெட்டப் போட்டோ இணையத்தில் கசிந்து மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

படையப்பா பெல்ட்
படையப்பா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மெட்டல் பெல்ட்டை கழட்டி எதிரிகளை பந்தாடும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி உலகளவில் உள்ள சூப்பர்ஸ்டார் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. இந்நிலையில், அதே போல ஒரு மெட்டல் பெல்ட்டை எடுத்துக் கொண்டு வாயில் சிகரட்டுடன் செம ஸ்டைலாக ஜவான் ஷாருக்கான் சண்டை போடும் காட்சிகளும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

மும்பை ஷூட்டிங்கை முடித்த நயன்தாரா
சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் தனது மும்பை போர்ஷனை முடித்து விட்டு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்துக்கு சென்று சென்னை திரும்பினார் நயன்தாரா. அதன் காட்சிகள் வெளியாகி டிரெண்டாகின. அடுத்த போர்ஷன் படப்பிடிப்பு உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











