இதோட நிறுத்திக்கலாம்ல.. ஒரே வருஷத்துல ஹாட்ரிக் அடிக்க திட்டமிட்ட ஷாருக்கான்.. டன்கி ரிலீஸ் எப்போ?

மும்பை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஃபேன் மற்றும் ஜீரோ உள்ளிட்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்த நிலையில், சில ஆண்டுகள் சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் நடித்தால் ஹிட் படத்தில் மட்டுமே நடிப்பேன் என்கிற வைராக்கியத்துடன் ஷாருக்கான் இருந்து வந்த நிலையில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்தார்.

Shah Rukh Khan plans to get hatrick 1000 crore movies to Bollywood in 2023

பதான் பக்கா: அந்த படத்தில் தீபிகா படுகோன் தாராள கவர்ச்சி காட்டிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூல் வேட்டையை அசால்ட்டாக நடத்தியது. ஜான் ஆபிரகாம், திம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்து இருந்தனர்.

சிறப்பு கேமியோவாக டைகர் சல்மான் கானும் இடைவேளை காட்சியின் போது வந்த நிலையில், படம் வெறித்தனமாக ஓடியது.

ஜவான் ஜாக்பாட்: அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படத்தையும் செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டு இதுவரை 700 கோடி வசூலை அசால்ட்டாக அள்ளி பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கா பாப் தான் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளார்.

ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி, சஞ்சய் தத், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த ஜவான் திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு முத்த மழை பொழிந்துள்ளார்.

Shah Rukh Khan plans to get hatrick 1000 crore movies to Bollywood in 2023

ஹாட்ரிக் அடிக்க திட்டம்: இந்த இரு படங்களே 2023ம் ஆண்டு பாலிவுட்டுக்கு 2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் படமாக மாற உள்ள நிலையில், வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே மற்றும் சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற டாப்ஸி ஹீரோயினாக நடித்துள்ள டன்கி திரைப்படம் வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்பையும் ஷாருக்கான் அதிரடியாக அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

இதோட போதும் நிறுத்திக்கலாம் என ஜெயிலர் படத்தின் மீமை போட்டு பாலிவுட் ரசிகர்கள் ஷாருக்கானை கட்டுப்படுத்த நினைக்க.. ரொம்ப தூரம் போயிட்டேன்.. முழுசா 3000 கோடியை அள்ளாம திரும்ப மாட்டேன் என ஷாருக்கான் ஹாட்ரீக் வசூல் வேட்டையை நடத்தப் போவது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X