யாருப்பா சொன்னது ஷாருக்கான் படம் டிராப்னு.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த அட்லி!

சென்னை: பீஸ்ட் டிரைலரை இயக்குநர் அட்லி உடன் இணைந்து பார்த்து மகிழ்ந்ததாக நடிகர் ஷாருக்கான் போட்டுள்ள ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வந்த பாலிவுட் படம் டிராப் ஆனது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இயக்குநர் அட்லி ஒரே கல்லில் ஷாருக்கானை வைத்து இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஷாருக்கான் பாராட்டு

ஷாருக்கான் பாராட்டு

நடிகர் விஜய்யின் பீஸ்ட் டிரைலர் வெளியாகி 40 மில்லியன் பார்வைகளை கடந்து உலகளவில் டிரெண்டாகி வருகிறது. ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அந்த டிரைலரை பாராட்டி வந்த நிலையில், பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் டிரைலரை பாராட்டி போட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்

நடிகர் ஷாருக்கான் பீஸ்ட் படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நடிகர் விஜய்யின் பீஸ்ட் டிரைலர் "Meaner.. Leaner.. Stronger" ஆக உள்ளது என ரொம்பவே டிரைலரை ரசித்துப் பார்த்து இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார். ஷாருக்கானின் ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அட்லியுடன் பார்த்தேன்

அட்லியுடன் பார்த்தேன்

மேலும், இயக்குநர் அட்லியுடன் அமர்ந்து கொண்டு விஜய்யின் பீஸ்ட் டிரைலரை பார்த்தேன் என்றும், அவர் என்னை விட தீவிரமான விஜய் ரசிகர் என குறிப்பிட்டதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கானின் படம் அப்போ டிராப் ஆகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.

யாரு சொன்னா டிராப்னு

யாரு சொன்னா டிராப்னு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் (லயன்) படம் டிராப் ஆகி விட்டது என்றும் இதற்கு மேல் அந்த படம் ஆரம்பிக்காது என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது முதல் முதலாக அட்லியுடன் அமர்ந்து கொண்டு பீஸ்ட் டிரைலரை பார்க்கிறேன் என ஷாருக்கான் சொன்னதை பார்த்த அட்லி ரசிகர்கள் யாரு சொன்னா ஷாருக்கான் - அட்லி படம் டிராப்னு, பதான் முடிந்ததும் அட்லியின் லயன் வெளியே வரும் என கொண்டாடி வருகின்றனர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

இயக்குநர் அட்லி ஷாருக்கானை வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஷாருக்கான் மூலமாக அட்லி தனது படத்தை கன்ஃபார்ம் செய்துள்ளார் என்றும், ஷாருக்கானை விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க வைத்து தளபதி 67 படத்திற்கும் சிக்னல் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷாருக்கானுக்கு நன்றி

ஷாருக்கானுக்கு நன்றி

இப்படியொரு ட்வீட்டை யாராவது எதிர்பார்த்தீங்களா என கமெண்ட் போட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருக்கும் த்ரோபேக் புகைப்படத்தை ஷேர் செய்து ஷாருக்கானுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், அட்லி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் அட்லிக்கு ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X