சென்னை ரசிகர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம்… தடபுடலான விருந்து… சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங் கடந்த 30 நாட்களாக சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுக்காக தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

ஜவானில் ஷாருக்கான்
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, இப்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தில், யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் கமிட் ஆகியுள்ளனர். ஜவான் படம் மூலம் அனிருத் முதன்முறையாக அட்லீயுடன் இணைகிறார். மும்பையில் நடைபெற்று வந்த ஜவான் ஷூட்டிங், கடந்த 30 நாட்களாக சென்னையில் பிரம்மாண்டமான செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் ட்வீட்.
ஜவான் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்த ஷாருக்கான், இங்கு தங்கியிருந்த 30 நாட்கள் பற்றி சூப்பராக ட்வீட் செய்திருந்தார். அதில், ஜவான் படத்திற்காக சென்னையில் தங்கிருந்த 30 நாட்களும் சூப்பர் என குறிப்பிட்டிருந்தார். தலைவர் ரஜினிகாந்த் செட்டில் வந்து தன்னை சந்தித்தது ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் என்றும், நயன்தாரா, அனிருத்துடன் படம் பார்த்தது, பார்ட்டி சென்றது குறித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல், விஜய் சேதுபதியுடன் கலந்துரையாடியது, விஜய், அட்லீ ஆகியோர் விருந்து வைத்தது என பல சுவாரஸ்யங்களையும் பகிர்ந்திருந்தார்.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
இதனிடையே தனது சென்னை ரசிகர்களுக்கும் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஷாருக்கான். சென்னையில் உள்ள தனது ரசிகர்களில் 20 பேருக்கு, அவர் தங்கியிருந்த 5 ஸ்டார் ஹோட்டலில் 2 பட்லர்களை புக் செய்து கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய உணவை சாப்பிட வைத்து அழகு பார்த்துள்ளார். பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் ரசிகர்களே எதிர்பார்க்காத ஷாக்கிங் சர்பரைஸ் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார் ஷாருக்கான். மேலும், அந்த ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து புகைப்படங்களும் எடுத்துள்ளார் ஷாருக்கான்.

வைரலாகும் போட்டோஸ்
5 ஸ்டார் ஹோட்டலில் ஷாருக்கானை அவரது சென்னை ரசிகர்கள் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை தனக்கு நிகராக 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, விருந்தும் கொடுத்துள்ள ஷாருக்கானின் பரந்த மனதை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ஷாருக்கானை 5 ஸ்டார் ஹோட்டலில் வைத்து நேரில் சந்தித்த ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "நாங்கள் எதிர்பார்க்காத ஒரு தரமான ஏற்பாட்டை செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார் ஷாருக்கான். எல்லோரையும் தனித்தனியாக சந்தித்து அவர் உரையாடியது மறக்க முடியாத தருணம்" எனக் கூறியுள்ளனர். ஷாருக்கானின் இந்த செயல், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











