Jailer 2: அமீர் கானுக்கு செஞ்சதே போதும்.. உஷாரான ஷாருக் கான்.. ரஜினி படத்துக்கே கல்தாவா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து திரையுலகில் பரவலாக பரவி வரும் தகவல் ஒன்று ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிக்க, குறிப்பாக ஒரு கேமியோ கதாபாத்திரத்திற்கு பாலிவுட் கிங் ஷாருக்கான் அணுகி உள்ளனர். அவரும் கதையை கேட்டு விட்டு, தனக்கு நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கின்ற படங்களை மட்டுமே தான் நடிப்பதாகவும், ஒரு படத்தில் வெறுமனே இரண்டு காட்சி ஒரு காட்சி என வந்து செல்லும், கேமியோ கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்றும் தீர்க்கமான முடிவில் இருப்பதாகவும் கூறி, படக் குழுவினரிடம் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான்: ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியானதுமே பலரும், இதற்கு காரணம் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் அமீர்கானை மிகச் சரியாக பயன்படுத்தாதது தான் என்றும் லோகேஷ் கனகராஜை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களைப் பொறுத்தவரையில், அவரது ஜெயிலர் படத்திலிருந்து தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் ஜாக்கி ஷெராஃப், வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், கூலி படத்தில் அமீர்கான் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஷாருக்கான் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ரிலீஸ்: ஜெயிலர் 2 படத்தைப் பொறுத்த வரையில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றாலும் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்புக்கு மத்தியிலேயே, படத்தின் எடிட்டிங் வேலைகள் பெரும் பகுதி முடிந்து விட்டதாகவும், தற்போது படமாக்கப்பட்டு வரும் காட்சிகளை மட்டும் எடிட் செய்து பின்னணி இசை கோர்ப்பு பணிகளை தொடங்கினால், போதும் என்று கூறப்படுகிறது. இதனால் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேமியோ: ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்க மறுத்ததை போலவே தெலுங்கு நடிகர் பாலய்யாவும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஜெயிலர் படத்தில் ஏற்கனவே ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், மோகன்லால் என பல முன்னணி நடிகர்கள் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ள தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications