தீவிபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் மேனேஜர்.. ரியல் ஹீரோவாக மாறி காப்பாற்றிய ஷாருக்.. குவியும் லைக்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜரை தீவிபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.

Recommended Video

Aishwarya Rai manager தீ விபத்தில் சிக்கினார்-வீடியோ

மும்பை: தீ விபத்தில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராய் மேனேஜரின் உயிரை, நடிகர் ஷாருக்கான் காப்பாற்றி இருக்கிறார்.

தீபாவளி பண்டிகைக்கு பார்டி கொடுக்கும் கலாச்சாரம் பாலிவுட்டில் இருந்து வருகிறது. யாராவது ஒருவர் பார்டி கொடுப்பார். சக நடிகர், நடிகையர் அனைவரும் அதில் கலந்துகொள்வர்.

Shah Rukh Khan rescues Aishwarya Rais manager from a fire accident

இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தீபாவளி விருந்து கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இந்த பார்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அமிதாப் பச்சனின் வீட்டில் நடைபெற்ற இந்த பார்டியில், ஷாருக்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி, அமிதாப்பின் வீடு வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராயிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக பணிபுரிந்து வரும் அர்ச்சனா சதானந்த்தும் கலந்துகொண்டார். அர்ச்சனா அணிந்திருந்த ஆடையில் ஒரு விளக்கில் இருந்து தீ பற்றியது. இதனால் அவர் அலறி துடித்தார்.

இதை பார்த்த ஷாருக்கான் சற்றும் தாமதிக்காமல், தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை கழட்டி, அர்ச்சனா மீது போர்த்தி தீயை போராடி அணைத்தார். இதில் ஷாருக்கானுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டது.

தீ விபத்தில் சிக்கிய அர்ச்சனாவுக்கு 15 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரது இரண்டு கைகள் மற்றும் வலது காலில் தீக்காயம்பட்டது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது உயிரைப்பற்றி கவலைப்படாமல், ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஷாருக்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரியல் ஹீரோவாக மாறிய ஷாருக் என ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X