பாகி.ல் 8 தியேட்டர்... 4 கோடி வசூல்: ‘தபாங்’ சாதனையை முறியடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’
டெல்லி: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானிலும் வசூல் சாதனை புரிந்து வருகிறதாம்.
இதுவரை இல்லாத அளவுக்கு வசூலில் அசத்தி வரும் சென்னை எக்ஸ்பிரஸ் யூனிட், இந்த பாகிஸ்தான் தகவலால் மேலும் குஷியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இதுவரை இருந்து வந்த அத்தனை பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளையும் சென்னை எக்ஸ்பிரஸ் முறியடித்து விட்டதாம்.

ரம்ஜான் ரிலீஸ்...
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 9ம் தேதி பாகிஸ்தானில் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது.

ஹவுஸ் புல் தான்...
ரிலீஸான முதல் நாளிலிருந்தே அது அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூல் வேட்டை...
கராச்சியில் இந்தப் படம் புதிய வரலாறு படைத்துள்ளதாம் வசூலில். இதுவரை அங்கு இந்தியப் படங்கள் படைத்திருந்த அத்தனை வசூல் சாதனையையும் சென்னை எக்ஸ்பிரஸ் முறியடித்து விட்டதாம்.

ஐஎம்ஜிசி....
ஐஎம்ஜிசி நிறுவனம்தான் பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. துபாயிலிருந்து படங்களை வாங்கி பாகிஸ்தானில் இது திரையிடுகிறது.

8 தியேட்டர்... 4 கோடி வசூல்
கராச்சியில் 8 திரைகளில் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடிக் கொண்டிருக்கிறதாம். எட்டிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாம். இதுவரை அங்கு 4 கோடி பாகிஸ்தான் ரூபாய் அளவுக்கு வசூலாகியுள்ளதாம்.

தபாங்கை தோற்கடித்த சென்னை எக்ஸ்பிரஸ்...
இதற்கு முன்பு கராச்சியில் வசூலில் சாதனை படைத்த படம் சல்மான் கானின் தபாங் ஆகும். அதை ஷாருக் கான் படம் முறியடித்து விட்டது.

ஆறு ஷோ...
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் ஒரு நாளைக்கு ஆறு ஷோ வரை போடுகிறார்களாம் தியேட்டர்களில்.


Click it and Unblock the Notifications











