பலத்த பாதுகாப்புடன் ரெடியாகும் அட்லீ – ஷாருக்கான் பட செட்
மும்பை : பாலிவுட்டில் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ள டைரக்டர் அட்லீ, ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் நடித்து வருகிறார். இதன் பணிகள் முடிந்த பிறகே அட்லீ உடனான படத்தில் கலந்து கொள்ள உள்ளார். ஆனால் இதன் ஆரம்ப கட்ட வேலைகளை அட்லீ ஏற்கனவே துவக்கி விட்டாராம்.

படப்பிடிப்பு ஆரம்பமாகிடுச்சு
லேட்டஸ்ட் தகவலாக படத்தின் சோதனை படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி விட்டதாம். இதில் பங்கேற்ற ஷாருக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி, இந்த தகவலை ஃபோட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு
அதில் மாஸ்க் அணிந்திருப்பது போன்ற தனது ஃபோட்டோவை பதிவிட்டு அத்துடன், கூடுதல் பாதுகாப்புடன் செட்டை தயார் செய்திருப்பதற்காக அட்லீக்கு நன்றி. இது என்னை சூப்பர் கூலாக வைப்பதுடன், வித்தியாசமாக உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

அட்லீயை சந்தித்த ஷாருக்
2019 ல் சென்னையில் உள்ள அட்லீயின் ஆபீசிற்கு திடீரென வந்த ஷாருக்கான், சில மணிநேரம் இருந்து பேசி விட்டு சென்றுள்ளார். இதனால் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி சூப்பர்ஹிட் கொடுத்த அட்லீ, ஷாருக்கானை இயக்க உள்ள தகவல் பரவியது.

ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் அட்லீ
பல மாதங்களாக அட்லீயும் ஷாருக்கானும் ஆலோசித்து கதையை ஓகே செய்துள்ளார்களாம். ஆகஸ்டில் துவங்க உள்ள இந்த படத்தில் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் அட்லீ தீவிரமாக இறங்கி உள்ளார்.

இரட்டை வேடங்களில் ஷாருக்
நீண்ட காலமாக துவங்கப்படாததால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூட வதந்தி பரவியது. ஆனால் அனைத்தையும் தாண்டி ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











