ஜவான் படத்தில் விஜய் சேதுபதி.. சென்னையில் நடக்கும் சூட்டிங்கில் பங்கேற்பு.. ட்ரெண்டிங்கில் ஜவான்!

சென்னை : பாலிவுட் ஸ்டார் ஷாருக், நயன்தாரா நடிப்பில் உருவாகிவருகிறது ஜவான் படம்.

இந்தப் படத்தை அட்லி இயக்கிவரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் மிகப்பெரிய பான் இந்தியா படமாக ஜவான் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துவரும் படம் ஜவான். இந்தப் படத்தை தமிழில் தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கி வரவேற்பு பெற்ற இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் படமே பாலிவுட் பாட்ஷாவுடன் அவர் இணைந்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெறும் சூட்டிங்

விறுவிறுப்பாக நடைபெறும் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அவர் இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த விஷயங்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சென்னை சூட்டிங்கில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் படத்தில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை சூட்டிங்கில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் படத்தில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் படத்தில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் இதையொட்டியே சென்னையில் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சென்னை சூட்டிங்கில் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ட்ரெண்டிங்கில் ஜவான்

ட்ரெண்டிங்கில் ஜவான்

இதனிடையே ஜவான் படத்தையும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது குறித்து தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். காலை முதலே ஜவான் படம் ட்ரெண்டிங்கில் காணப்படுகிறது. இதனிடையே கடந்த 2019ல் ஷாருக்கான் விஜய் சேதுபதியை பாராட்டிய வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் சேதுபதியை பாராட்டிய ஷாருக்

விஜய் சேதுபதியை பாராட்டிய ஷாருக்

மெல்போர்னில் நடைபெற்ற பிலிம் பெஸ்டிவலில் பேசிய ஷாருக்கான், தான் பார்த்த நடிகர்களில் விஜய் சேதுபதிதான் சிறப்பான நடிகர் என்று தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கமெண்ட்டை கேட்ட விஜய் சேதுபதி, நெகிழ்ச்சியாக நன்றி தெரிவிப்பதாக அந்த வீடியோவில் காணப்படுகிறது.

பவர்புல் கேரக்டரில் விஜய் சேதுபதி

பவர்புல் கேரக்டரில் விஜய் சேதுபதி

ஷாருக்கானின் நல்ல கமெண்ட்டை பெற்றுள்ள விஜய் சேதுபதி, தற்போது அவருடன் இணைந்து நடிக்கவுள்ளதும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு கண்டிப்பாக பவர்புல்லான கேரக்டர் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X