ஸ்பைடர் எஸ்ஜே சூர்யா லுக் மாதிரியே இருக்கே.. இதுவும் காப்பியா? அட்லியை கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: ராஜ ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என இயக்குநர் அட்லி இயக்கிய அத்தனை படங்களிலும் ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷன் இருப்பது தெளிவாகவே தெரியும்.

அதற்காக அவரை பயங்கரமாக நெட்டிசன்கள் மற்றும் அவரது ஹேட்டர்கள் ட்ரோல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஷாருக்கானை வைத்து அவர் இயக்கி வரும் ஜவான் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் தற்போது வெளியான நிலையில், அதில் இருக்கும் ஷாருக்கானின் லுக்கை பார்த்த நெட்டிசன்கள், இதுவும் காப்பி என விமர்சித்து வருகின்றனர்.

நீண்ட நாள் காத்திருப்பு

நீண்ட நாள் காத்திருப்பு

பிகில் முடித்த கையோடு ஷாருக்கானின் படத்தை இயக்க பாலிவுட்டுக்கு கிளம்பிய இயக்குநர் அட்லி பல ஆண்டுகளாக நடிகர் ஷாருக்கான் இப்படியொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை எப்போ வெளியிடுவார் என காத்திருந்தார். கடைசியில், அவரது உழைப்பு மற்றும் காத்திருப்புக்கு கிடைத்த பலனாக தற்போது ஜவான் தான் படத்தின் டைட்டில் என்றும் ஷாருக்கானின் லுக் இப்படித்தான் இருக்கும் என்றும் டீசர் வெளியிட்டு இயக்குநர் அட்லியை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார் ஷாருக்கான்.

அந்த டைட்டில் இல்லை

அந்த டைட்டில் இல்லை

சங்கி என்றும் லயன் என்றும் ஷாருக்கான் - அட்லி படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின. ஆனால், தற்போது இந்த படத்திற்கு ஜவான் தான் டைட்டில் என்பது உறுதி ஆகி உள்ளது. ஜவான் என்றதும் ராணுவ வீரராக ஷாருக்கானை காட்டுவார் அட்லி என்று பார்த்தால், வெறித்தனமான லுக்கில் முகம் முழுவதும் கட்டுப் போட்டு, ஒற்றைக் கண் மட்டுமே தெரிவது போல காட்சிப் படுத்தி உள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

பதான், டன்கி மற்றும் ஜவான் என அடுத்தடுத்து ஷாருக்கான் பெரிய சம்பவம் பண்ணப் போறாரு என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள், காலண்டரை கிழித்தாலே அடுத்த ஆண்டு வந்து விடுமா? என்கிற அளவுக்கு அப்படியொரு வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர். அட்லி படத்தில் ஷாருக்கானின் மிரட்டல் லுக்கை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் வேறலெவல் என கொண்டாடி வருகின்றனர்.

ஸ்பைடர் காப்பி

ஸ்பைடர் காப்பி

ஆனால், ஷாருக்கானின் ஜவான் லுக்கை பார்த்த சில நெட்டிசன்கள் இந்த படம் மகேஷ் பாபு மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தின் காப்பியா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர். ஸ்பைடர் படத்தில் முகத்தில் கோணியை கிழித்து முகமூடியாக அணிந்து மிரட்டி இருப்பார் எஸ்.ஜே. சூர்யா. அவரது தோற்றத்தைத் தான் அப்படியே அட்லி காப்பி அடித்து விட்டார் என நெட்டிசன்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

அனிருத் பெயர் இல்லை

அனிருத் பெயர் இல்லை

டைட்டில் அறிமுக டீசரில் அதற்கு பிஜிஎம் போட்ட இசையமைப்பாளர் அனிருத் பெயர் ஏன் இல்லை என்கிற கேள்வியையும் ரசிகர்கள் அட்லியிடம் எழுப்பி வருகின்றனர். நயன்தாரா ஹீரோயின் என்பது குறித்த அப்டேட்டும் காணவில்லையே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் வெளியாகிறது.

படம் வரட்டும்

படம் வரட்டும்

மேலும், ஜவான் படம் வரட்டும் இன்னும் எத்தனை எத்தனை தமிழ் படங்களில் இருந்து காட்சிகளை உருவி எடுத்து வைத்திருக்கிறார் அட்லி என புட்டு புட்டு வைக்கலாம் என அட்லியின் ஹேட்டர்கள் இப்பவே ரெடியாகி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் தனது திரைக்கதை மூலம் பதிலடி கொடுத்து மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என அட்லி ரசிகர்கள் அவர் பக்கம் நின்று எப்போதும் போல ஆதரவு அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X