அட்லி – ஷாருக்கனின் ‘ஜவான்‘.. ரத்தக்களரியுடன் பயமுறுத்தும் டீசர் வெளியானது !
சென்னை : பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில், நயன்தாரா,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான்
பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. திட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக்கானின் எந்த படங்களும் வெளியாகாததால் அவரின் படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

இயக்குநர் அட்லீ
பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்துள்ள அட்லீ ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். 2020ம் ஆண்டு இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் கொரோனாவின் தாக்கம், ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டது என பல பிரச்சனை காரணமாக படம் தாமதமாகிக் கொண்டே சென்றன. ஒரு கட்டத்தில் அட்லீயின் பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

மிரட்டலான டீசர்
இந்நிலையில், ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில், ஷாருக்கான் ரத்தம் வழிந்த முகத்துடன் காணப்படுகிறார். முகம், கை என அனைத்திரும் துணியால் கட்டுப் போடப்பட்டுள்ளது. ஜவான் திரைப்படத்திற்காக ஒரு புதுவிதமான அவதாரம் எடுத்து இருக்கிறார் ஷாருக்கான். துப்பாக்கியும் கையுமான மிரட்டலான சிரிப்புடன் வெளியாகி இருக்கும் இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட என ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'லயன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'ஜவான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது டீசரின் மூலம் உறுதியாகி உள்ளது.

இரட்டை வேடத்தில்
இப்படத்தில் ஷாருக் மற்றும் நயன்தாராவைத் தவிர சன்யா மல்ஹோத்ராவும் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார், அதே நேரத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகனாக ஒரு கதாபாத்திரத்திலும், கேங்க்ஸ்டர் மற்றொரு வேடத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











