தொடர்ந்து வசூல்மழையில் ஷாருக்கானின் பதான் படம்.. இன்று 900 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்ப்பு!
மும்பை : நடிகர் ஷாருக்கா, தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் பதான்.
நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், 4 ஆண்டுகள் இடைவெளியில் வெளியான இந்தப் படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு நிலவியது.
அந்த எதிர்பார்ப்பை பதான் படம் சிறப்பான அளவில் பூர்த்தி செய்து வசூல்மழை பொழிந்து வருகிறது.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் ரசிகர்களால் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர். பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவந்த ஷாருக்கான், தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக படங்கள் எதையும் ரிலீஸ் செய்யவில்லை.

பதான் படம்
இந்நிலையில், தற்போது தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து மீண்டு, தற்போது பதான் என்ற படத்தை ரிலீஸ் செய்துள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானிற்கு தீபிகா படுகோனே ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தில் ஜான் ஆப்ரஹாமும் நடித்துள்ளார். மேலும் சல்மான் கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கேஜிஎப் 2 படத்தை முந்திய பதான்
இந்திய அளவில் இதுவரை வெளியான படங்களில் பாகுபலி 2 படம் 510 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து கேஜிஎப் 2 படம் வசூலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், அந்தப் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி தற்போது ஷாருக்கானின் பதான் படம் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவிப்பு
கேஜிஎப் 2 படத்தின் வசூல் 430 கோடியாக இருந்த நிலையில், தற்போது பதான் படத்தின் இந்திய வசூல் 446 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனிடையே பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்க பதான் படத்திற்கு இன்னமும் 64 கோடி ரூபாய் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

ரூ.900 கோடி வசூலை எட்டுமா?
நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பதான் படம் சர்வதேச அளவில் 877 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்றைய தினம் படம் 900 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் நிகர வசூலாக 446 கோடி ரூபாயும் மொத்த வசூலாக 536 கோடி ரூபாயையும் பதான் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 329 கோடி ரூபாய் வசூலை படம் எட்டியுள்ளது.

மெயின் பிக்சர்
ஷாருக்கானுக்கு இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.அடுத்ததாக ஷாருக்கின் ஜவான் படம் இன்னும் இரு மாதங்களில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பதான் படம் டீசர் தான் என்றும் மெயின் பிக்சர் ஜவான் என்றும் ரசிகர்கள் இப்போதே அந்தப் படத்திற்காக தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











