பதான் பாக்ஸ் ஆபிஸ் சகாப்தம் ஓவர்... அடுத்து ஓடிடி ரிலீஸுக்கு ரெடி... SRK ரசிகர்கள் கொண்டாட்டம்!

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வெளியானது.

ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம், சல்மான் கான் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

பாய்காட் பதான் போன்ற பிரசாரங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், திரையரங்குகளில் 50 நாட்களை நெருங்கிவிட்ட பதான், ஓடிடியில் வெளியாக ரெடியாகிவிட்டது.

பதான் பாக்ஸ் ஆபிஸ்

பதான் பாக்ஸ் ஆபிஸ்

ஷாருக்கான் சீக்ரெட் ஏஜென்ட்டாக அவதாரம் எடுத்த பதான், ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக ரிலீஸான பதான், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்புப் பெற்றது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது. முக்கியமாக ஷாருக்கானுக்கு எதிராக பாய்காட் பிரசாரங்கள் ட்ரெண்டான போதும், இதுவரை 1060 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் அப்டேட்

ஓடிடி ரிலீஸ் அப்டேட்

ஷாருக்கான் இந்தப் படத்தில் பதான் என்ற சீக்ரெட் ஏஜென்டாக நடித்துள்ளார். தீவிரவாதியாக மாறிய முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஜான் ஆப்ரஹாமிடமிருந்து, இந்தியாவை எப்படி ஷாருக்கான் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதை. ஷாருக்கானுடன் தீபிகா படுகோனேவும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். துபாய் சாலைகளில் பெரிய டிரக் மீது ஷாருக்கானும் ஜான் ஆபிரஹாமும் போடும் சண்டைக் காட்சி, ரஷ்யாவில் நடக்கும் ரயில் சண்டைக் காட்சியும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தன. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அமேசான் ப்ரைமில் பதான்

அமேசான் ப்ரைமில் பதான்

அதன்படி, பதான் திரைப்படம் வரும் 22ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் 50 நாட்களை நெருங்கிவிட்ட பதான், இப்போதும் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், எதிர்பார்த்ததை விடவும் கொஞ்சம் தாமதமாகவே ஓடிடியில் வெளியாகிறது பதான் அமேசான் ப்ரைமில் வெளியாவதை அடுத்து ஓடிடி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஜவான் அப்டேட் வெயிட்டிங்

ஜவான் அப்டேட் வெயிட்டிங்

பதான் படத்தில் ஷாருக்கானுடன் சல்மான்கானும் இணைந்து நடித்திருந்தது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. முன்னதாக இந்தப் படம் வெளியாகும் முன்பே, 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி பிகினியில் ஆட்டம் போட்டது சர்ச்சையானது. இதனால் தான் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரிலீஸ் தேதியில் மாற்றம்

ரிலீஸ் தேதியில் மாற்றம்

அட்லீ இயக்கி வரும் ஜ்வான் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கான், நயன், விஜய் சேதுபதி, ப்ரியா மணி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதலில் ஜூன் 2ம் தேதி ஜவான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X