Pathaan Box Office: கிங் கான் இஸ் பேக்.. முதல் நாளிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்த பதான்!

மும்பை: ஷாருக்கானின் பதான் உலகளவில் முதல் நாளில் 100 கோடி ரூபாயை கடந்து பேய்த்தனமான வசூல் வேட்டையை நிகழ்த்தி உள்ளதாக #Pathaan100crWorldwide என்கிற ஹாஷ்டேக்கை ஷாருக்கான் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தி பெல்ட்டில் மட்டும் முதல் நாளில் ஷாருக்கானின் பதான் அதிகபட்சமாக 57 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா, ஜான் ஆபிரகாம் மற்றும் நட்புக்காக சல்மான் கான் நடித்துள்ள பதான் திரைப்படம் குடியரசு தின விடுமுறை தினமான இன்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிட்ட இடங்களில் எல்லாம் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

நான் ஹாலிடே

நான் ஹாலிடே

முன்னணி நடிகர்கள் எல்லாம் விடுமுறை தினத்தில் படங்களை ரிலீஸ் செய்யாமல் அதற்கு முன்னதாகவே புதன்கிழமைகளில் புதிய படத்தை வெளியிட ஆரம்பித்து விட்டனர். நான் ஹாலிடேவில் படம் வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது என்பதை புரிந்து கொண்டே இனிமேல் வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமை எல்லாம் படம் ரிலீஸ் இல்லை புதன் கிழமை தான் என புதிய தேதியையே சினிமா உலகத்தினர் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தவிடு பொடியான எதிர்ப்பு

தவிடு பொடியான எதிர்ப்பு

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சில்வர் ஸ்க்ரீனில் ஹீரோவாக ஷாருக்கான் வருவதை பார்க்கவே பாலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், காவி பிகினி சர்ச்சையை கிளப்பி படத்தை முடக்க ஒரு கூட்டம் சதி செய்தது. ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் மாஸ் என்டர்டெயின் மற்றும் தேசபக்தி கன்டென்ட் ஆக்‌ஷன் படமாக வெளியான பதான படத்தை கொண்டாடி வருகின்றனர்.

100 கோடி கிளப்

100 கோடி கிளப்

ஷாருக்கானின் பதான் திரைப்படம் முதல் நாளில் இந்தி பெல்ட்டில் மட்டும் 57 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாகவும் சர்வதேச அளவில் 100 கோடி ரூபாய் வசூலை முதல் நாளிலேயே தட்டித் தூக்கி உள்ளதாக #Pathaan100crWorldwide ஷாருக்கான் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரிபப்ளிக் டே போனஸ்

ரிபப்ளிக் டே போனஸ்

புதன்கிழமை முதல் நாளில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்து விடும் நிலையில், 2வது நாளான இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் 95 சதவீதத்திற்கு மேல் அரங்குகள் முழுவதும் நிறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், படம் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X