சூரிய ஒளியில் தகதகக்கும் ஷாருக்கான்.. வெளியானது பதான் டீசர்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

மும்பை: கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு புதிதாக எந்தவொரு கதையையுமே தேர்வு செய்யாமல் சில ஆண்டுகளை கழித்தார் நடிகர் ஷாருக்கான்.

கொடுத்தால் நல்ல படம் கொடுக்க வேண்டும் என தென்னிந்தியாவில் இருந்து இயக்குநர் அட்லி, வெற்றிமாறன் உள்ளிட்டோரிடமும் கதையை கேட்டார்.

அதில், இயக்குநர் அட்லியின் கதையை ஓகே செய்து நடித்து வரும் ஷாருக்கான், அதற்கு இடையே வார் படத்தை இயக்கி பெரிய வெற்றி கொடுத்த இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் பதான்.

வார்

வார்

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி 400 கோடிக்கும் மேல் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடிய வார் திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தவர் சித்தார்த் ஆனந்த். அவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

பதான் டீசர்

ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் இன்ட்ரோ கொடுக்க பிரம்மாண்ட சூரியன் பேக்ட்ராப்பில் இருக்க தகதகக்க நடந்து வரும் ஷாருக்கானின் கொல மாஸ் என்ட்ரியுடன் இந்த பதான் டீசர் தற்போது வெளியாகி சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இப்படியொரு டீசரை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், செம ஷாக் கொடுத்திருக்கிறார் ஷாருக்கான்.

நிம்மதியான நிலையில்

நிம்மதியான நிலையில்

மகன் ஆர்யான் கானுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று தெரிவித்த நிலையில், அந்த நிம்மதியில் தனது பதான் படத்தின் அறிவிப்பை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார் என்றும் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

எப்போ ரிலீஸ் தெரியுமா

எப்போ ரிலீஸ் தெரியுமா

2018க்கு பிறகு 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் புதிய படம் வெளியாகவில்லையே என பாலிவுட் ரசிகர்கள் புலம்பித் தவித்து வரும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் இந்த ஆண்டையும் சற்று பொறுமையாக கடந்தே ஆக வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் அபிரகாம் நடித்துள்ள பதான் படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி 2023ல் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்போ அட்லி படம்

அப்போ அட்லி படம்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் லயன் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள அந்த படம் அப்போ எப்போதான் ரிலீஸ் ஆகும் என்கிற கேள்வியை அட்லி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். எப்படியோ 2024ம் ஆண்டு அல்லது 2023ம் ஆண்டு இறுதியில் அந்த படம் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X