அப்போ அட்லி? ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோனின் ‘பதான்’ படம் அடுத்த வருஷம் தான் ரிலீஸ்!
மும்பை: ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பதே பெரிய கேள்விக் குறியாக இருந்தது.
இயக்குநர் அட்லி மற்றும் வெற்றிமாறன் ஷாருக்கானை சந்தித்து கதை சொல்லி இருந்தனர்.
இதில், இயக்குநர் அட்லி படத்தில் தான் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் 'பதான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தீபிகா தான் ஹீரோயின்
ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தீபிகா படுகோனே, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களை தொடர்ந்து மீண்டும் ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நாக் அஸ்வின் படத்திலும் தீபிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வார் பட இயக்குநர்
ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் மற்றும் வாணி கபூர் நடிப்பில் இயக்குநர் யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் கடந்த 2019ம் ஆண்டு 150 கோடி பட்ஜெட்டில் வெளியான வார் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தான் தற்போது ஷாருக்கான் பதான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

ஜான் ஆபிரகாம்
'ரா' ஏஜென்ட்டாக நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்து வரும் நிலையில், இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆணழகன் எனும் பெயர் பெற்ற ஜான் ஆபிரகாம் மட்டுமின்றி வேறு சில முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெற உள்ளனர்.

சல்மான் கானும் ஹிரித்திக் ரோஷனும்
வார் படத்தில் நடித்த ஹிரித்திக் ரோஷன் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கான், சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து திரையை அதிரவைக்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு தான்
இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் 2022ம் ஆண்டு தான் ரிலீசாகும் என அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள், பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள், மிகப்பெரிய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இருப்பதால் இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அப்போ அட்லி
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 4 பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அட்லியின் கதையையும் நடிகர் ஷாருக்கான் ஓகே செய்துள்ளார். ஆனால், முதலில் பதான் படத்தை முடித்து விட்டுத் தான் அடுத்த படத்திற்கு செல்ல உள்ளார். அதுவரை இயக்குநர் அட்லி காத்திருக்கப் போகிறாரா? இல்லை தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்!


Click it and Unblock the Notifications











