Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சூப்பர்ஸ்டார் கழுத்தில் மாலைக்கு பதில் பாம்பை தூக்கிப் போட்ட ரசிகர்.. அடப்பாவமே இப்டியா வரவேற்பீங்க?
கழுத்தில் மலைப்பாம்புடன் ஷாருக் நிற்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
சென்னை: ஆஸ்திரேலியாவில் கழுத்தில் மலைப்பாம்புடன் நடிகர் ஷாருக் நிற்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். இவர் தமிழில், ஹே ராம், சாம்ராட் அசோகா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
தற்போது மெல்பெர்னில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார் ஷாரூக். இந்த விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி மற்றும் காயத்திரியும் கலந்து கொண்டுள்ளனர்.
வைரல் புகைப்படம்:
ஷாருக், விஜய் சேதுபதி, காயத்திரி உள்ளிட்டோர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அங்கிருந்து ஏகப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் கழுத்தில் மலைப் பாம்புடன் நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
கௌரவ டாக்டர் பட்டம்:
அங்குள்ள லா துரோப் பல்கலைக்கழகத்தில் ஷாருக்கிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது ஷாருக்கானுக்கு வழங்கப்படும் 5-வது கௌரவ டாக்டர் பட்டம் ஆகும். அப்போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாம்பு மாலை:
திடீரென ஷாருக்கை வரவேற்கும் விதமாக ஒருவர் மலைப் பாம்பை அவரது கழுத்தில் மாலைப் போல் போட்டு விட்டு நகர்ந்துவிடுகிறார். முதலில் இதனால் ஷாருக் அதிர்ச்சியாகிறார். பின்னர் அவர் சிரித்துக் கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
ரசிகர்கள்:
இந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டிங்காகியுள்ளது. பாம்பு கழுத்தில் இருக்கும் போதும், அசராமல் பயப்படாமல் எப்படி நிற்கிறார் பாருங்கள் எங்கள் சூப்பர்ஸ்டார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.