டேட்டிங் வாங்க.. பப்ளிக்காக அழைத்த வித்யா மணி.. ஆடிப்போன ஷாருக்கான்.. என்ன பதில் சொன்னார் தெரியுமா?
மும்பை: இந்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்தியா படமாக வெளியான பதானுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் 900 கோடி ரூபாய் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தன்னை டேட்டிங் அழைத்த ரசிகைக்கு ஷாருக்கான் சொன்ன பதில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

சம்பவம் செய்த ஷாருக்கான்
4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி பிகினியில் ஆட்டம் போட்டது பயங்கரமான சர்ச்சையானது. இதனால் நெட்டிசன்கள் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். ஆனாலும் இந்த பாய்காட் பிரச்சாரத்தை எல்லாம் முறியடித்து சம்பவம் செய்துள்ளார் ஷாருக்கான்.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை
பாதான் ரிலீஸ் தேதியன்று பல இடங்களில் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். ஆனால் ஷாருக்கானின் பதான் இந்த எதிர்ப்புகளையெல்லாம் அடித்து நொறுக்கி பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வருகிறது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பதான், ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், பதான் இந்தியாவில் மட்டும் 446 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் 329 கோடி ரூபாய் கலெக்ஷன் என மொத்தம் ரூ.877 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. இதனால் ஷாருக்கான் உட்பட பதான் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டேட்டிங் அழைத்த ரசிகை
கடந்தாண்டு வெளியான பல இந்திப் படங்கள் பாய்காட் சர்ச்சையில் சிக்கி பாக்ஸ் ஆபிஸில் மிக மோசமான தோல்வியைத் தழுவின. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஷாருக்கானி பதான் வட்டியும் முதலுமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் சல்மான் கானும் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்து அசத்தியிருந்தார். அதேபோல் தீபிகா கிளாமர் ப்ளஸ் ஆக்ஷனில் அதகளம் செய்திருந்தார். இதனிடையே பதான் படத்தை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் ஷாருக்கானை டேக் செய்து ட்வீட் செய்திருந்தனர். அவர்களில் ஒரு ரசிகை, ஷாருக்கானுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என ட்வீட் செய்திருந்தார்.

கிரேட் எஸ்கேப் ஆன ஷாருக்
அதில், "நான் உங்களை திருமணம் செய்துகொள்ள கேட்கவில்லை. ஆனால் காதலர் தினத்தன்று உங்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம்?" எனக் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஷாருக்கான், "நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்கள் நல்ல பையனுடன் சேர்ந்து பதான் படத்தை பாருங்கள்" என்று ஜாலியாக கூறியுள்ளார். ரசிகையின் ட்விட்டர் பதிவுக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான், பதான் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு தொடர்ந்து நன்றி கூறி ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதான் திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











