ஹே ராம் படத்திற்காக ஷாருக் வாங்கிய சம்பளம்...வைரலாகும் கமல் வீடியோ
சென்னை : கிங் ஆஃப் பாலிவுட் என கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப் லிஸ்டில் இருப்பவர்களில் ஷாருக்கானும் ஒருவர். இதே போன்று தமிழில் டாப் நடிகராக இருப்பவர் கமல்.
தற்போது கமல், விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் பதான் படத்தை முடித்து விட்டு, அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

வைரலாகும் கமலின் வீடியோ
ஷாருக்கான், கமலுடன் இணைந்து ஹே ராம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக ஷாருக்கானுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் ரகசியத்தை கமல் வெளியிட்டுள்ளார். கமல் பேசிய இந்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கமலின் மாஸ்டர் பீஸ் படம்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பல திறமைகளைக் கொண்ட கமல் பல படங்களை இயக்கி உள்ளார். அப்படி 2000 ம் வெளியிடப்பட்ட மாஸ்டர்பீஸ் படம் ஹே ராம். இந்த படத்தில் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷாருக்கானுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம்
மகாத்மா காந்தியின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக ஷாருக்கானுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டதாக அந்த சமயத்தில் வதந்தி பரவியது. ஆனால் இது பற்றி ஷாருக்கான் இதுவரை வாய் திறக்கவில்லை.
Actor #ShahRukhKhan Salary For #HeyRam Actor #Kamal Reveals pic.twitter.com/PRJs0Zck00
— chettyrajubhai (chettyrajubhai) July 5, 2021
இது தான் கொடுத்தாரா கமல்
இது பற்றி கமல் பேசிய வீடியோவில், படத்தின் பட்ஜெட் பற்றி ஷாருக்கானுக்கு எதுவும் தெரியாது. இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. வாட்ச் ஒன்றை தான் அவருக்கு பரிசாக கொடுத்தேன். இந்த படத்தை இந்தியில் வெளியிடும் உரிமத்தை ஷாருக்கானுக்கு கொடுத்ததில் மகிழ்ச்சி என கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











