twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த தருணம்.. நம் வாழ்வின் இறுதியில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

    |

    மும்பை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    Recommended Video

    Allu Arjun Huge Contribution | FEFSI Workers

    கொரோனா நிவாரண நிதியாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளார்.

    Shah Rukh Khan shared his selfie with a safety message!

    நடிகர் ஷாருக்கான், தனது 4 அடுக்கு அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ள மத்தியரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில், எந்த உதவியை வேண்டுமானாலும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    என்னது தொழிலதிபரோட திருமணமா? இந்த கொரோனா நேரத்துல ஏன் இப்படி வதந்தி? பிரபல ஹீரோயின் காட்டம்!என்னது தொழிலதிபரோட திருமணமா? இந்த கொரோனா நேரத்துல ஏன் இப்படி வதந்தி? பிரபல ஹீரோயின் காட்டம்!

    இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கான் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    கொரோனா வைரஸ் காரணமாக இப்படி ஒட்டு மொத்த உலகமே வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையை சில மாதங்களுக்கு முன்னதாக நாம் யாரும் நினைத்துப் பார்த்திருக்கக் கூட மாட்டோம். 60 ஆயிரத்திற்கும் மேலான உயிர்களை இந்த கொடிய நோய் கொண்டு போகும் என நினைத்திருக்கவும் மாட்டோம் என்பதை உணர்த்தும் வகையில், "இந்த தருணத்தை நம் வாழ்வின் முடிவில் நிச்சயம் அனைவரும் நினைத்துப் பார்ப்போம். இது ஒரு மறக்க முடியாத அனுபவம். பாதுகாப்பாக இருங்கள், தனித்திருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என ஷாருக்கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    மேலும், இந்த பதிவுக்கும் தான் போட்டுள்ள இந்த செல்ஃபி போட்டோவுக்கும் சம்பந்தமில்லை. நான் இப்போ நலமா இருக்கிறேன் என்பதை மட்டுமே இது காட்டுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

    ஷாருக்கானின் இந்த பதிவுக்கு கீழே ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Bollywood actor Shah Rukh Khan shared his selfie with a stay safety and stay distant message in his twitter page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X