சட்டையை கழட்டி..சிக்ஸ் பேக்கை காட்டிய ஷாருக்கான்..உங்களால் இத பண்ண முடியுமா!

சென்னை : பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் சட்டையை கழட்டி சிக்ஸ் பேக் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

சினிமா பின்னனி இல்லாமல் வந்து உலகத்தின் பெரிய நடிகர் ஆனவர்களில் ஷாருக் கானும் ஒருவர். படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து தற்போது உலக அரங்கில் போற்றப்படும் வளர்த்து இருக்கிறார்.

1992ல் முதல் முதலாக டர் என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். அன்றிலிருந்து அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் அவரை தற்போது இந்த உயரத்தில் கொண்டு வந்து வைத்துள்ளது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ திரைப்படம் வெளியானது. அதன் பிறகு அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவே இல்லை. இதனால், ரசிகர் ஷாருக்கானின் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். தற்போது அவர் பதான், ஜவான், டைகர் 3, துங்கி ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

பதான்

பதான்

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து வரும் பதான் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுவேகத்தில் நடந்து முடிந்து நிலையில் வரும் ஜனவரி 25-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பதான் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடப்படும் என்று ஷாருக் கான் ஏற்கெனவே தனது சமூகவலை தளத்தில் அறிவித்திருக்கிறார்.

அமேசான் ஒடிடி தளம்

அமேசான் ஒடிடி தளம்

மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் உரிமையை அமேசான் ஒடிடி தளம் ரூ. 200 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

கட்டுமஸ்தான உடல்

கட்டுமஸ்தான உடல்

ஷாருக்கானின் பதான் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில், ஷோபாவில் படுத்த படி சட்டை இல்லாமல் தனது கட்டுமஸ்தான உடலின் சிக்ஸ் பேக் அழகாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை ஷாருக்கான் ஷேர் செய்த வேகத்தில் பல லைக்குகளை தட்டித்தூக்கி வருகிறது.

சிரித்திருப்பீர்கள்

சிரித்திருப்பீர்கள்

இந்த போட்டோவை பகிர்ந்த ஷாருக்கான், அந்த புகைப்படத்தோடு இன்று நான் என் சட்டையில் இருந்து விடுபடுகிறேன். நீங்கள் இருந்ததால் எப்படி இருப்பீர்கள்... இதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.. இதை பார்த்து எவ்வளவு சிரித்திருப்பீர்கள்.. எனக்கு அது நடந்திருக்கும் என எழுதியுள்ளார்.

கடினமாக உழைப்பாளி

கடினமாக உழைப்பாளி

இந்த போட்டோவை பார்த்த ஷாருக்கானின் தீவிரரசிகர் ஒருவர், 2023 ஆம் ஆண்டின் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆண்டாக அமையும். உங்களுக்கு மட்டுமே அடுத்த ஆண்டு 3 திரைப்படங்களை வெளியாக உள்ளன. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நான் மிகவும் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன் என ஷாருக்கை பாராட்டி உள்ளார்.

ஜவான்

ஜவான்

பதான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X