அட்லீ இல்லையாமே.. அடுத்த பட இயக்குனரை முடிவு செய்தார் ஷாரூக் கான்!!

By

மும்பை: தனது அடுத்த படத்தின் இயக்குனரை, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் முடிவு செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான். இவர் கடைசியாக, ஆனந்த். எல்.ராய் இயக்கியிருந்த 'ஸீரோ' என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை ஷாரூக். நல்ல கதைகளில் நடிக்கலாம் என்று பல இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அதில் ஒருவர், நம்ம ஊர் அட்லீ!

Shah Rukh Khan signs a stylish action drama

இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது உறுதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது. 'பிகில்' தெலுங்கு பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் இதை உறுதிப்படுத்தினார். ஆனால், ஷாரூக் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடிய ஷாரூக் கான், சில இயக்குனர்களை பார்ட்டிக்கு அழைத்திருந்தார். அதில் நம்மூரில் இருந்து அட்லீயும் வெற்றி மாறனும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இயக்கும் படங்களில் ஷாரூக் கான் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், மவுனம் காத்தார் பாலிவுட் பாட்ஷா.

இதற்கிடையே, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருவதாகவும் அடுத்தப்படம் பற்றி விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் ஷாரூக்.

இந்நிலையில் அடுத்தப்பட இயக்குனர்களை உறுதி செய்திருக்கிறார் அவர். அது அட்லீ இல்லை. பிரபல பாலிவுட் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே (ராஜ் நிடுமொரு, கிருஷ்ணா டி.கே) இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஷாரூக். இந்த இயக்குனர்கள், 99. ஷோர் இன் த சிட்டி, கோ கோவா கான், ஹேப்பி என்டிங், எ ஜென்டில்மேன் ஆகிய இந்தி படங்களை இயக்கியவர்கள்.

ஆக்‌ஷன் காமெடி படமான இதன் ஷூட்டிங், அடுத்த வருடம் தொடங்குகிறது. இதை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை அடுத்து ஷாரூக், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், ஒரு ரசிகரின் கமென்ட், அப்பாடா, இனிமே நல்லா தூங்க முடியும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X