பப்பில் ஷாருக்கான் மகன் செய்த சேட்டை.. நடு விரலை காட்டி மாட்டிட்டாரே.. என்ன ஆனது?
மும்பை: பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான டன்கி, ஜவான், பதான் ஆகிய மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகியிருந்தன. இப்போது கிங் படத்தில் நடித்துவருகிறார். அவருக்கு ஆர்யன் கான் என்ற மகன் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் கைதாகி வெளியே வந்த அவர்; The Bads of Bollywood என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார்.
உலக அளவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஷாருக்கான். திரைத்துறைக்கு வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்களை சந்தித்த அவர்; தன்னுடைய திறமையை மட்டும் வளர்ப்பதில் குறியாக இருந்தார். அப்படி திறமையை வளர்த்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அவருக்கு ரசிகைகளாக மாறினார்கள்.
இப்போதும் அப்படித்தான்: ஷாருக்கானுக்கு இப்போது 60 வயது ஆகிறது. இத்தனை வயது ஆகியும் அவர் மேன்லியாக இருப்பதாகவும்; அவர்தான் தங்களது ஆல்டைம் க்ரஷ்ஷாக இருபவர் என்று இப்போதும் ரசிகைகள் அவரை கொண்டாடிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றபடிதான் அவரும் தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்துவருகிறார்.

ஷாருக்கின் மகன்: கடைசியாக அவர் நடித்த மூன்று படங்களும் மெகா ஹிட். இப்போது கிங் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகன் இருக்கிறார். ஆரம்பத்தில் பெரிதாக கேமரா முன்பு தலைகாட்டாத அவர்; சில வருடங்களுக்கு முன்பு ஒரு போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். அவர் கைது செய்யப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரேக்கிங் நியூஸாக அமைந்தது.
ஆர்யன் இயக்கிய வெப் சீரிஸ்: சில காலம் சிறையில் இருந்த அவர் வெளியே வந்து The Bads Of Bollywood என்ற வெப் சீரிஸை இயக்கினார். சமீபத்தில் அது வெளியாகி பாலிவுட்டில் பேசுபொருளானது. வெப் சீரிஸ் பெற்ற வரவேற்பு ஆர்யனுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாகவும்; அடுத்தடுத்து இயக்கத்தில் கவனம் செலுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அவரது மார்க்கெட் இப்போதுதான் சீராக செல்ல ஆரம்பித்திருக்கும் நிலையில் புது சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது வழக்கறிஞர் ஒருவர் ஆர்யன் கான் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் நவம்பர் 28ஆம் தேதி அன்று பெங்களூருவில் இருக்கும் பப் ஒன்றில் கூட்டத்தை பார்த்து ஆர்யன் கான் நடுவிரலை காட்டி ஆபாச செயலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆர்யன் கான் இதனை செய்தபோது அங்கே ஏராளமான பெண்கள் இருந்ததாகவும்; இதில் ஆர்யன் மீது உடனடியாக எஃப்ஐஆர் போட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











