சரக்கு வியாபாரத்தை ஆரம்பித்த ஷாருக்கான் மகன்.. பிரபல நடிகைகளுடன் ராத்திரி முழுக்க பார்ட்டி வேறு!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மகனை மீட்டெடுத்தார் ஷாருக்கான்.
இந்நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிதாக D'YAVOL எனும் சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார்.
அதற்காக டிவி நடிகைகள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு அவர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ஆர்யன் கானை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் கைது
ஷாருக்கானின் மகன் தடைசெய்யப்பட்ட போதைப் பார்ட்டியை சொகுசு கப்பலில் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. மகனை ஜாமினில் விடுவிக்க ஷாருக்கான் பெரும் போராட்டத்தையே நடத்தினார். பின்னர், தனது மகன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபித்து மகனை கைது செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்த நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சாராய வியாபாரம்
இந்நிலையில், ஷாருக்கானின் மகன் புதிதாக D'YAVOL எனும் சரக்கு பிராண்டை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்காக இந்தி டிவி நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் பார்ட்டி ஒன்றை நடத்தி இருக்கிறார் ஆர்யன் கான். அதில், நடிகைகளுடன் செம ஜல்சாவாக ஆர்யன் கான் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

பார்ட்டியில் டிவி நடிகைகள்
ஆர்யான் கான் பார்ட்டி வைத்தாலே டிவி நடிகைகள் சும்மா குவிந்து விடுவது வழக்கமாகி வரும் நிலையில், சரக்கு நிறுவனத்துக்கான பார்ட்டியில் இந்தி டிவி நடிகைகள் ரோஷ்னி வாலியா, நைரியா பானர்ஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

படு நெருக்கமாக
ஆர்யன் கான் உடன் படு நெருக்கமாக பார்ட்டியில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அந்த டிவி நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து ரொம்ப நாள் கழித்து ஆர்யன் கான் சிரிப்பதை பார்த்தோம் என்றும் கமெண்ட் போட்டுள்ளனர்.

விளாசும் நெட்டிசன்கள்
ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் சிக்கித்தான் ஆர்யன் கானை அவரது அப்பா ஷாருக்கான் போனா போகுதுன்னு ஜாமினில் எடுத்தார். ஆனால், தற்போது புதிதாக சரக்கு பிராண்டை வேற ஆரம்பித்து இப்படி நடிகைகளுடன் லூட்டி அடிக்கிறாரே எங்கே போய் சிக்கப் போகிறாரோ என நெட்டிசன்கள் ஆர்யன் கானை விளாசி வருகின்றனர்.

இயக்குநர் ஆக பிளான்
சமீபத்தில் திரைக்கதை ஒன்றை எழுதி இருப்பதாகவும் இயக்குநராக போகிறார் ஆர்யன் கான் என்றும் அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது பிசினஸில் இறங்கி உள்ள ஆர்யன் கான் இப்படியொரு துறையை தேர்ந்தெடுத்திருக்கிறாரே என விளாசி வருகின்றனர். ஷாருக்கான் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருகிறார். ரெட் சில்லிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் நிலையில், அவரது மகன் ஆர்யன் கான் இப்படியொரு வியாபாரத்தில் இறங்கி இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

10 கோடிக்கு கார்
சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் 10 கோடி ரூபாய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் 555 கார் வாங்கிய நிலையில், அந்த காரையும் ஆர்யன் கான் தான் பயன்படுத்தி வருகிறார் என்றும் மகனுக்காகவே ஷாருக்கான் இந்த படத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











