பணம் என்னங்க பணம்.. மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்!
மும்பை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கானை தனது அடுத்த படமான கிங் படத்தில் நடிக்க வைக்க உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில்,படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மகள் அறிமுகமாகும் இந்த படத்திற்காக ஷாருக்கான் பல கோடியை செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு ஷாருக்கான் அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில்: ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் திரைப்படம் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படத்தில் ஷாருக்கான் இந்திய ரா பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது. இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான், டர்கி ஆகிய படங்கள் வெளியாகினது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அடுத்த படத்தில்: இந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, திரைப்படத் தயாரிப்பாளரான சுஜோய் கோஷால் இயக்க உள்ள நிலையில் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. போர், பதான், ஃபைட்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சித்தார்த் ஆனந்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மகளுக்காக ரூ200 கோடி: இந்த படத்தில் ஷாருக்கானின் செல்ல மகள் சுஹானா கான் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும், மகள் அறிமுகமாகும் படம் என்பதால், இந்த படத்தை ரூ 200 கோடியில் மிகப்பெரிய பட்ஜெட் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதால், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்று பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
நெகிழ்ச்சி பேச்சு: குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட ஷாருக்கான் தனது மகளுக்காக நிச்சயம் பணத்தை தண்ணியாக செலவு செய்ய தயங்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அண்மையில் ஜவான் திரைப்படத்திற்கு ஜீ சினி விருது கொடுத்த போது நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், இந்த விருதை, எனது குழந்தைகளான ஆர்யன் கான், சுஹானா கான், அப்ராம் கான் மற்றும் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன், அவர்களால் தான் இது சாத்தியம் என்று பேசி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











