Jawan: பாவாடையை சுற்றி சுற்றி ஆடிய நயன்.. ஜவான் 'ஹையோடா' பாடலை பார்த்து டென்ஷனான பேன்ஸ்!
சென்னை: ஜவான் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஹையோடா' பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடலைப் பார்த்த ரசிகர்கள் டென்ஷனாகி கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.
கோலிவுட்டை கலக்கிய அட்லீ தற்போது பாலிவுட்டில் தரமான சம்பவத்தை செய்ய காத்து இருக்கிறார். இவர் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.
இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷாருக்கானின் ஜவான்: ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிளான வந்த எடம் பாடல் அண்மையில் வெளியானது. இப்பாடலை விவேக் எழுத அனிருத் பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.
ஹையோடா பாடல்: வந்த எடம் பாடலைத் தொடர்ந்து, இரண்டாவது சிங்கள் பாடலான 'ஹையோடா' பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தமிழில் அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ளனர். இந்தியில் பிரபல பாடகர் அர்ஜித் சிங்கும், தெலுங்கில் சின்னத்திரை நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் ஆதித்யா பாடியுள்ளார்.
பாவாடையை சுற்றி டான்ஸ்: ரொமான்ஸ் கலந்த மெலடியான இந்த பாடலைப் பார்த்த ரசிகர்கள் என்ன இது மனசுல ஒட்டவே இல்லையே, நடிகர்களுடன் நெருக்கமான நடிக்கமாட்டேன் என்று முடிவு செய்துள்ள நயன்தாரா, தீபாவளிக்கு எடுத்த புது பாவாடையை அனைவருக்கும் காட்டுவது போல பாவாடையை சுற்றி சுற்றி ஆட்டம் போட்டுள்ளார்.
மொத்தத்தில் ஒன்றுமே இல்லை: பாலிவுட் என்றாலே கொஞ்சம் கவர்ச்சி ஓவராத்தான் இருக்கும் அதுக்காக, நெருக்கமாகவே நடிக்க மாட்டேன் என ரயில் தண்டவாளம் போல ஷாருக்கான் அங்கேயும், நயன்தாரா இங்கேயும் நின்று கொண்டு இருக்க. பாடலில் சம்பந்தமே இல்லாத இரண்டு வந்து கண்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்கிறார். இதையெல்லாம் பார்த்து டென்ஷனான பேன்ஸ், முத்தக் காட்சிகள் இல்லை, அழுக்கான காட்சிகள் இல்லை, ஓவர் ஆக்டிங் இல்லை மொத்தத்தில் பாடலில் ஒன்றுமே இல்லை என்று கொந்தளித்துள்ளார்.
தவிர்ப்பது இல்லை: மற்றொரு ரசிகர் தியேட்டரில் இந்த பாடலைத் தவிர்ப்பது நல்லது இல்லையெனில் பார்வையாளர்கள் இந்த பாடலை தவிர்த்துவிட்டு வெளியில் தம் அடிக்க சென்றுவிடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார். தமிழ் ஆடியன்சுக்கே இப்படினா பாலிவுட்டில் ரசிகர்கள் இந்த பாடலை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











