மும்பை ஏர்போர்ட்டில் ஷாருக்கானை சுற்றிவளைத்த ஆஃபிசர்ஸ்… இது யார் வீசிய வலை…?: பரபரக்கும் பாலிவுட்

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பதான் திரைப்படம் ஜனவரியிலும், ஜவான் அடுத்தாண்டு ஜூன் மாதமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கானுக்கு நடந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்

பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டராக வலம் வருகிறார் ஷாருக்கான். பாலிவுட் பாட்ஷா என கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டு முன் குவிந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பதான், ஜவான் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஷாருக்கான். இதில் பதான் திரப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. அதேபோல் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் அடுத்தாண்டு ஜூன் 2ம் தேதி ரிலீஸாகிறது.

மும்பை ஏர்போர்ட்டில் ஷாருக்

மும்பை ஏர்போர்ட்டில் ஷாருக்

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஷாருக்கானும் அவரது குழுவைச் சேர்ந்த 5 பேரும் ஆப்பிள் ஐ வாட்ச், 6 விலையுயர்ந்த வாட்ச்களை எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த வாட்சகளின் மொத்த மதிப்பு 17.86 லட்சம் ரூபாய் என்றும், ஷாருக்கான் அதற்கு வரி செலுத்தாமல் எடுத்துச் சென்றதால், அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இந்தச் சம்பவம் குறித்து கிடைத்த தகவல்களின் படி, ஷாருக்கானும் அவரது குழுவினரும் ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்துள்ளனர். அப்போது ஷாருக்கானும் அவரது குழுவினரும் எடுத்துச் சென்ற லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அப்போது அதில் விலையுயர்ந்த காஸ்ட்லியான வாட்ச்களும், சுமார் 75 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் ஐ வாட்ச்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்பதால், இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பில் 38.5 சதவீதத்தை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளியேறிய ஷாருக்கான்

வெளியேறிய ஷாருக்கான்

அதன்பின்னர் ஷாருக்கானும் அவரது குழுவினரும் ரூ.6.88 லட்சத்தை சுங்க வரியாக செலுத்திவிட்டு அங்கிருந்து தங்களது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். அதாவது இந்த தொகை ஷாருக்கான் எடுத்து வந்த வாட்ச்களின் மதிப்பில் 38.5 சதவீதம் என சொல்லப்படுகிறது. ஷார்ஜாவில் இருந்து வாங்கி வந்த வாட்ச்களுக்கு வரி செலுத்தாதால் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதற்கான தொகையை கொடுத்த பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மற்றபடி பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை என்பதால், ஷாருக்கானின் ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X