twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபிகாவுக்கு லுங்கி கட்டி விட்ட ஷாருக்!

    By Sudha
    |

    மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனின் காஸ்ட்யூம் ஒன்று, மும்பை வட்டாரத்தைக் கலக்கி வருகிறது. அது வேறு ஒன்றுமில்லை -லுங்கியும், சட்டையும்தான்.

    தமிழ் சினிமாவில் பொதுவாக, காட்சியில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏற்றிக் கட்டி லுங்கி மற்றும் கழுத்தில் கர்ச்சீப் சகிதம், சுவிட்சர்லாந்தில் ஒரு பாட்டு வைப்பார்கள். அப்படித்தான் விஜய் படத்தில் என்னோட லைலா பாட்டை செட் செய்து பட்டையைக் கிளப்பினார்கள்.

    அதே பாணியில், ஷாருக்கானும் ஒரு படத்தில் தீபிகாவை வித்தியாசமாக காட்டியுள்ளார். அந்த காட்சியும் இப்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டதாம்.

    சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பாலிவுட் படத்தில்தான் இந்தக் களேபரம்... அது என்ன என்று பார்ப்போமா...

    லுங்கி - சட்டையில் ரவுசு லுக்...

    லுங்கி - சட்டையில் ரவுசு லுக்...

    இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் லுங்கி, சட்டையில் படு ரவுசாக காட்சி தருகிறார் தீபிகா. அதேபோல ஷாருக்கானும் வேட்டி, சட்டையில் கலங்கடிக்கிறார். கூடவே டான்ஸர்களும் சுத்தமான தமிழ் முகங்களுடன்.

    லுங்கி கட்டச் சொன்னதே ஷாருக்தான்

    லுங்கி கட்டச் சொன்னதே ஷாருக்தான்

    இதுகுறித்து தீபிகா கூறுகையில், உண்மையில் இந்த காஸ்ட்யூமை செலக்ட் செய்தது ஷாருக்கானும், டைரக்டர் ரோஹித் ஷெட்டியும்தான். ஷாருக்தான், லுங்கியை எடுத்து ஷெட்டியிடம் கொடுத்து தீபிகாவுக்கு இதை அணிவித்தால் வித்தியாசமாக இருக்குமே என்றார். அதை ஷெட்டியும் ஏற்றார். அதேபோல தனது சட்டையையும் கொடுத்தார் ஷாருக். நான் போட்டுள்ள கூலிங் கிளாஸ் மட்டும்தான் என்னுடையது..

    ஓம் சாந்தி ஓமுக்குப் பிறகு

    ஓம் சாந்தி ஓமுக்குப் பிறகு

    தீபிகாவுக்கு பெரும் ஏற்றம் கொடுத்த படம் ஓம் சாந்தி ஓம். அதுதான் அவரது முதல் படமும் கூட. அப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். எனவே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    டெல்லியும் இருக்கிறார்

    டெல்லியும் இருக்கிறார்

    சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நம்ம ஊர் சகலகலா நடிகர் டெல்லி கணேஷும் நடிக்கிறாராம்.

    கடுமையாக உழைத்தால் பலன் கிடைக்கும்

    கடுமையாக உழைத்தால் பலன் கிடைக்கும்

    பாலிவுட் வாழ்க்கை குறித்து தீபிகா கூறுகையில், கடுமையாக உழைத்தால் பலன் கிடைக்கும். இது எனது அனுபவம். அடுத்தடுத்து எனது படங்கள் இந்த ஆண்டு வரவுள்ளன.சென்னை எக்ஸ்பிரஸ் வருகிறது. தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள கோச்சடையான் வருகிறது என்றார் புன்னகையுடன்.

    சல்மானுடன் சேரவில்லை

    சல்மானுடன் சேரவில்லை

    சல்மான் கானுடன் அவரது கிக் படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிறீர்களாமே என்ற கேள்விக்கு,அப்படியெல்லாம் இல்லை, அது தவறான தகவல் என்று மறுத்தார் தீபிகா.

    பிரியாமணியின் குத்தாட்டம்

    பிரியாமணியின் குத்தாட்டம்

    சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கவர்ச்சிப் பிரியாணியும் உண்டாம். அது பிரியாமணியின் குத்துப் பாட்டு. ஷாருக் கானே கூப்பிட்டு பிரியாமணியை குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு கேட்டுக் கொண்டாராம். இதனால் சந்தோஷமாக ஒத்துக் கொண்டாராம் பிரியா மணி.

    நயனதாரா மறுத்ததால் பிரியாவுக்கு வாய்ப்பு

    நயனதாரா மறுத்ததால் பிரியாவுக்கு வாய்ப்பு

    முதலில் நயனதாராவைத்தான் இதற்காக நாடியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிடவே பிரியாமணியைப் பிடித்தனராம்.

    English summary
    Hopefully, Deepika Padukone's 'lungi' and shirt look from 'Chennai Express' posters does not spark a trend but it has certainly made everyone do a double take. The actress reveals that film's lead actor Shah Rukh Khan and director Rohit Shetty came up with the idea to dress her in a 'lungi'. "That's something new and I hope it works," says Deepika about her look.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X