Jawan - ஜவான் டீசர் எப்போது?.. ரசிகர் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

சென்னை: Jawan Teaser (ஜவான் டீசர்) ஜவான் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் பதிலளித்திருக்கிறார்.

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மௌன ராகத்தின் அப்டேட் வெர்ஷன் என அந்தப் படம் விமர்சிக்கப்பட்டாலும் படம் மெகா ஹிட்டானது. முதல் படத்தையே மெகா ஹிட்டாக கொடுத்துவிட்டால் அந்த இயக்குநரின் கிராஃப் உச்சம் சென்று விடும் என்ற கோடம்பாகத்தின் விதியின்படி அட்லீயின் கிராஃப்பும் ராஜா ராணி படத்துக்கு பிக்கப் ஆனது.

விஜய்யுடன் செய்த சம்பவங்கள்: ராஜா ராணி ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் வேறு படத்திலிருந்து உருவப்பட்டது என்று விமர்சனத்தை சந்தித்தாலும் அவரின் மேக்கிங் படத்தை காப்பாற்றியது. இதனால் தெறி ஹிட் ஆனது. அதனையடுத்து விஜய்யுடன் மெர்சல், பிகில் படங்களில் இணைந்தார் அட்லீ. இதில் மெர்சல் மெகா ஹிட்டாக பிகில் தோல்வி படமாக அமைந்தது.

Shah Rukh Khan Talks about Jawan Movie Teaser

ஷாருக்கானுடன் அட்லீ: மொத்தமே தனது கேரியரில் நான்கு படங்களை இயக்கிய அட்லீக்கு அடித்தது ஜாக்பாட். ஆம், வெகு சில படங்களிலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா வரிசையில் நேரடி ஹிந்தி படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் அட்லீ.

விஜய் சேதுபதி, நயன்தாரா: ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் ஜவான் நிச்சயம் அட்லீயின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நொடி ஆக்‌ஷன் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆக்‌ஷன் படம் என்றால் எப்படி எடுக்க வேண்டும் என ஹிந்தி திரையுலகுக்கு அட்லீ உணர்த்தியிருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்த்னர்.

ரிலீஸில் தாமதம்: விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. எனவெ படம் ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் முடிய தாமதமானதால் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இதற்கிடையே படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லாம் எப்போது வரும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஷாருக்கானின் ரசிகர்கள். ஆனால் அதுகுறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

ஷாருக் கொடுத்த அப்டேட்: இந்நிலையில் ஷாருக்கான் ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஜவான் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், "அது எல்லாமே தயாராக இருக்கிறது மற்ற விஷயங்கள் அதற்கான இடங்களில் இருக்கின்றன. கவலை வேண்டாம் எல்லாமே நல்ல இடத்தில்தான் இருக்கின்றன" என குறிப்பிட்டிருந்தார்.எனவே டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X