இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத உச்சம்.. ஷாருக்கானை கெளரவித்த புர்ஜ் கலிஃபா!

ஷாருக்கானின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு, துபாயில் உள்ள உலகின் மிக உயரிய கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கானின் பெயர் மின்னொளியில் மின்னியது.

மும்பை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் நேற்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஷாருக்கானின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு, துபாயில் உள்ள உலகின் மிக உயரிய கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கானின் பெயர் மின்னொளியில் மின்னியது.

உலகில் இதுவரை எந்த நடிகருக்கும் இப்படியொரு கெளரவம் கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப்போவதாகவும், அந்த படத்திற்கு சங்கி என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஷாருக்கானின் பிறந்தநாளான நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிவிப்பு வெளியாகும் என இந்தியளவில் ஹேஷ்டேகுகள் டிரெண்டானது. ஆனால், எந்தவொரு அறிவிப்பும் நேற்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

வழக்கம் போல் தனது பிறந்த நாள் அன்று தனது மன்னத் வீட்டின் மூன் கூடியிருந்த ரசிகர்களை நள்ளிரவில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட ஷாருக்கான், பின்னர், பிரம்மாண்ட அரங்கில் நடந்த பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டு கேக் வெட்டி, ரசிகர்களுடன் ஆடி பாடி கொண்டாடினார்.

கெளரவம்

கெளரவம்

ஷாருக்கானின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் பாலிவுட் கிங் ஷாருக்கான் என ஷாருக்கானின் பெயர் மின்னொளியில் மின்னியது. மேலும், ஷாருக்கான் படமான ஓம் சாந்தி ஓம் பட பாடல் ஓலிக்க நடந்த லேசர் ஷோவும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஹாலிவுட் நடிகர்கள் உட்பட இதுவரை எந்த நடிகருக்கும் இப்படி ஒரு கெளரவம் கிடைத்தது இல்லை.

நன்றி

நன்றி

துபாயின் சுற்றுலாத்துறை தூதுவராக இருக்கும் ஷாருக்கானுக்கு, புர்ஜ் கலிஃபா இப்படியொரு கெளரவத்தை அளித்ததை அறிந்த ஷாருக்கான், அதன் உரிமையாளர் முகம்மது அலாபருக்கு தனது நன்றியை தெரிவித்தார். தன்னை இத்தனை உயரத்தில் வைத்து அழகு பார்த்த சகோதரர் முகம்மது அலாபருக்கு நன்றி என ஷாருக்கான் கூறியுள்ளார்.

எந்த இயக்குநர்?

தனது 54வது பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஷாருக்கான் அடுத்ததாக, இயக்குநர் அட்லியின் சங்கி படத்தில் நடிக்கவுள்ளாரா? அல்லது இயக்குநர் வெற்றிமாறனின் அசுரன் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா? என்ற குழப்பம் எகிறியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கான் வெளியிட்டால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X