அட்லி தான் கன்ஃபார்மாம்.. ஷாருக்கான் பச்சைக் கொடி.. எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
மும்பை: அட்லி இயக்கத்தில் தான் ஷாருக்கான் அடுத்து நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி குமார், நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
Recommended Video
தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் கூட்டணி அமைத்த அட்லி, தெறி, மெர்சல், பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார்.

சொதப்பிய ஜீரோ
ஜீரோ படத்தின் படுதோல்வி பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பயங்கர அப்செட்டில் ஆழ்த்தியது. கடந்த ஒரு வருடமாக புதிய படங்கள் எதிலும், கமீட் ஆகாமல், பல பிரபல இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு வந்தார் ஷாருக்கான். தமிழ் இயக்குநர்களான அட்லி மற்றும் வெற்றி மாறனின் கதைகள் ஷாருக்குக்கு பிடித்திருந்தாதாக செய்திகள் வெளியாகின.

ராஜ்குமார் ஹிரானி
ஆனால், யார் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிப்பது என்ற புதிய குழப்பம் நடிகர் ஷாருக்கானின் மண்டையை பிடித்து ஆட்டியது. அட்லியின் கதைக்கு ஓகே சொன்ன ஷாருக்கான், அடுத்ததாக 3 இடியட்ஸ், பிகே படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானியிடம் கதையை கேட்டு ஓகே சொல்லி கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றும் செய்திகள் பரவின.

மீண்டும் அட்லி
ஆனால், இயக்குநர் அட்லி சொன்ன கதை ஷாருக்கான் மனதை விட்டு அகலாமல் இருந்துள்ளது. அதனால், தற்போது, இயக்குநர் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தை பண்ணுவது என்ற முடிவுக்கு ஷாருக்கான் வந்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், அட்லிக்கு இன்னொரு மிகப்பெரிய ஜாக்பாட்டும் அடித்துள்ளதாம்.

ஒண்ணு இல்லை மூணு
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தொடர்ச்சியாக 3 படங்களை இயக்க இயக்குநர் அட்லியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் தான் எல்லாத்துக்கும் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இத்தனை கோடியா?
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மூன்று படங்களை இயக்க, இயக்குநர் அட்லிக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த மூன்று படங்களிலும் ஷாருக்கானே நடிப்பாரா? அல்லது முதல் படத்தில் மட்டும் அவர் நடித்துவிட்டு, மற்ற இரு படங்களில் வேறு ஹீரோக்கள் நடிப்பார்களா என்பது குறித்த தகவல் இல்லை.

எப்போ ஷூட்டிங்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் 'சங்கி' எனும் படத்தில் நடிக்கப் போவதாக, ஷாருக்கானின் பிறந்த நாளன்று அறிவிப்பு வரும் என்று ட்விட்டரில் ஹாஷ்டேக் எல்லாம் டிரெண்டாகி வைரலானது. ஆனால், எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப் போகும் புதிய படம் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

விஜய்யுடன்
தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கான் படத்தை முடித்துவிட்டு தளபதி விஜய் படம் ஒன்றை இயக்க உள்ளார் என்றும், அதற்கான கதையை ஏற்கனவே விஜய்யிடம் அட்லீ கூறியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஷாருக்கான் படத்தை முடித்து விட்டுத் தான் கோலிவுட் பக்கம் அட்லி திரும்புவார் என்பது மட்டும் நிச்சயம்.


Click it and Unblock the Notifications











