ஆனந்த் அம்பானிக்கு 40 கோடிக்கு வீடு கொடுத்த ஷாருக்கான்.. கோடிக்கணக்கில் குவிந்த திருமண பரிசுகள்!

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்துக் கொண்ட மாப்பிள்ளையின் நெருங்கிய பிரபலங்களுக்கு எல்லாம் 2 கோடி ரூபாய்க்கு வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு வந்த சினிமா பிரபலங்கள் மணமக்களுக்கு கொடுத்த பரிசுகள் பற்றிய தகவல்கள் மலைக்க வைக்கின்றன.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை பரிசாக வழங்கியிருப்பதாக வெளியான தகவல் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் வாயடைக்க செய்துள்ளது.

Anant Ambani wedding Shah Rukh Khan Deepika Padukone

ஷாருக்கானை தொடர்ந்து அமிதாப் பச்சன் குடும்பம், சல்மான் கான், தீபிகா படுகோன் என முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கோடிக் கணக்கில் திருமண பரிசுகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

40 கோடி அபார்ட்மெண்ட்: இந்தியாவின் முதல் கோடீஸ்வரராக இருக்கும் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை மார்ச் மாதத்தில் ஆரம்பத்தில் ஜூலை வரை ஒரே கொண்டாட்ட மயமாக நடத்தி முடித்து விட்டார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் மற்ற எந்த பிரபலங்களும் கொடுக்காத பெரிய பரிசாக 40 கோடி ரூபாய்க்கு பிரான்ஸ் நாட்டில் ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Anant Ambani wedding Shah Rukh Khan Deepika Padukone

அமிதாப் பச்சன் பரிசு: ஷாருக்கானை தொடர்ந்து அமிதாப் பச்சன் குடும்பம் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாக கூறுகின்றனர். பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராயின் மகள் உள்ளிட்ட பலர் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அம்பானிக்கும் வெகுகாலமாகவே நண்பராக அமிதாப் பச்சன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Anant Ambani wedding Shah Rukh Khan Deepika Padukone

கோடிக் கணக்கில் குவிந்த பரிசுகள்: பாலிவுட் நடிகர் சல்மான் கான் 15 கோடி மதிப்பிலான சொகுசு பைக் ஒன்றை ஆனந்த் அம்பானிக்கு பரிசாக வழங்கியுள்ளாராம். நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இணைந்து 20 கோடி ரூபாய்க்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா தம்பதியினருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அக்‌ஷய் குமார் கொரானா காரணமாக திருமணத்தில் பங்கேற்காத நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு 60 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி தங்க பேனாவை ஆனந்த் அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்கின்றனர். ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி 9 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், மகேஷ் பாபு உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்களும் விலை மதிப்புமிக்க பொருட்களை பரிசுகளாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X