பீஸ்ட் படத்துல ஷாருக்கும்... ஷாருக் படத்துல விஜய்யும் செய்யவுள்ள கேமியோ ரோல்கள்

சென்னை : நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் வரும் ஜூலை 2ம் தேதி பங்கேற்கவுள்ளார்.

டூயட் பாடலுடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. பூஜா ஹெக்டேவும் இதில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிறந்தநாள் விருந்து

பிறந்தநாள் விருந்து

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது பீஸ்ட் படம். சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் தலைப்பு மற்றும் சூப்பரான இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்தன. இந்த போஸ்டர்களில் வித்தியாசமான இரண்டு விஜய்யின் போஸ்களை பார்க்க முடிந்தது.

சென்னையில் துவக்கம்

சென்னையில் துவக்கம்

ஜியார்ஜியாவில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு மற்றும் அறிவின் மேற்பார்வையில் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை 2ம் தேதி சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளது.

கேமியோ ரோலில் ஷாருக்

கேமியோ ரோலில் ஷாருக்

இதற்கென பிரமாண்டமான ஷாப்பிங் மால் செட் சென்னையில் போடப்பட்டுள்ளது. இதையொட்டி ஜூலை 1ம் தேதி படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சென்னை வரவுள்ளார். இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஷாருக் படத்தில் கேமியோ

ஷாருக் படத்தில் கேமியோ

ஆனால் கதைக்கு மிகவும் முக்கியமான ரோலாக அது இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல ஷாருக்கான் மற்றும் அட்லி இணையும் பாலிவுட் படத்தில் விஜய் கேமியோ ரோல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இவை நடந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் அது மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X