தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸில் ரம்ஜான் அன்று மோதும் ஷாருக், விஜய், பவன் கல்யாண் படங்கள்
சென்னை: ரம்ஜான் அன்று தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸில் பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்கள் மோதவிருக்கின்றன.
ரம்ஜான் பண்டிகை அன்று ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ், விஜய்யின் தலைவா மற்றும் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
பாலிவுட்டில் ஷாருக்கான், கோலிவுட்டில் விஜய் மற்றும் டோலிவுட்டில் பவன் கல்யாண் ஆகியோர் முன்னணி ஹீரோக்கள் ஆவர்.

பவனுடன் மோதும் விஜய்
விஜய்யின் தலைவா படம் அண்ணா என்ற பெயரில் ரம்ஜான் அன்று தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. அதே தினத்தில் பவன் கல்யாணின் படமும் ரிலீஸ் ஆகிறது.

ரஜினியின் சப்போர்ட்
ஷாருக்கான் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி பாடலை ரஜினிகாந்துக்கு டெடிகேட் செய்வதாகத் தெரிவித்துள்ளார். பாட்டில் ரஜினியின் புகைப்படங்கள் பின்னணியில் வருகின்றன.

பாக்ஸ் ஆபீஸ்
தென்னிந்திய பாக்ஸ் ஆபீஸில் ரம்ஜான் அன்று மூன்று முக்கிய நடிகர்களான ஷாருக், விஜய், பவன் கல்யாண் ஆகியோரின் படங்கள் மோதவிருக்கின்றன.

சல்மான் மிஸ்ஸிங்
கடந்த சில ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகை தினத்தன்று தனது படங்களை ரிலீஸ் செய்து வந்தார் சல்மான் கான். ஆனால் இந்த ரம்ஜானுக்கு சல்மான் கான் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.


Click it and Unblock the Notifications











