ஏழுமலையானே ஜவான் நல்லா ஓடனும்பா..திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான்!
திருப்பதி: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தில், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குநர் அட்லி: ஜவான் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அட்லீயுடன் ஷாரூக்கான் சேர்ந்து நடனமாடிய எடம் பாடல் மற்றும் நயன்தாராவுடன் சேர்ந்து ஆடிய ரொமான்ஸ் பாடல், ராமையா வஸ்தாவையா பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அனிருத் என்ட்ரி கொடுத்திருக்கும் அனிருத்திற்கு இப்படத்திற்கு பின் பாலிவுட்டிலும் அவர் கொடி பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசைவெளியீட்டுவிழா: ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் வந்த நிலையில் நயன் மட்டும் வரவில்லை. அதற்கு காரணம் அவர் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா சென்று விட்டதாக மேடையிலேயே அட்லீ கூறினார்.
இதுவே அவரின் சொந்தப் படமாக இருந்தால் முதல் ஆளாக வந்து நின்று இருப்பார் என்ற பேச்சு எழுந்த நிலையில், இன்ஸ்டாவிலாவது புரோமோட் பண்ணுங்கள் என்று படக்குழு கூறியதன் பேரில் தான் வேகமாக இன்ஸ்டா பக்கத்தை தொடங்கி அதில் ஜவான் படத்தை ப்ரோமோட் செய்தார்.
திருப்பதியில் சாமி தரிசனம்: இந்நிலையில், ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஷாருக்கான், ஷாருக்கானின் மகள் சுப்ரதா, நயன்தாரா உள்ளிட்டோர் குடும்பத்துடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்திருந்தனர். இதையடுத்து இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் இருவரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் பட்டு வேட்டை, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை வழிபட்டார்.
பட்டு வேட்டி சட்டையில் ஷாருக்கான்: அதே நயன்தாரா வெள்ளை நிற சுடிதாரிலும், விக்னேஷ் சிவன் பட்டு வேட்டியிலும் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் ஷாருக்கான் நடப்பதை நிறுத்திவிட்டு ஓட்டமாக ஓடி சென்று கார் ஏறினார். இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











