முரட்டுத்தனமான தோற்றம்...ஷாரூக் முதலிடம், அடுத்தடுத்த இடங்களில் ரன்பீர், ஹிருத்திக்
மும்பை: முரட்டுத்தனமான முகத்தோற்றம் கொண்ட ஆண்கள் குறித்து எடுக்கப் பட்ட ஆன்லைன் சர்வேயில் நடிகர் ஷாரூக்கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஆண்கள் குறித்து சாதி.காம் சார்பில் ஆன்லைன் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் ஷாரூக் அதிக ஓட்டுகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும், சர்வேயில் பெறப்பட்ட தகவல்களாவன....

ஆய்வு...
24 முதல் 30 வயது வரை உள்ள 5500 இந்தியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலிடத்தில் ஷாரூக்...
முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஆண்கள் ஆய்வில் ஷாருக்கானிற்கு 26.3% ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதிக ஓட்டுகளைப் பெற்றதால் ஷாரூக் கான் முதலிடத்தில் உள்ளார்.

ரன்பீர்....
இரண்டாவது இடத்தில் ரன்பீர் கபூர் உள்ளார். அவர் பெற்ற ஓட்டுக்கள் 21.2% ஆகும்.

ஹிர்திக்...
மூன்றாமிடத்தில் 11.03% ஓட்டுக்கள் பெற்று ஹிருத்திக் ரோஷன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

விராட், ஜான் ஆப்ரஹாம்...
முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்ட ஆண்கள் என்ற வரிசையில் விராட் கோஹ்லி, அர்ஜூன் ராம்பால், ஜான் ஆப்ரஹாம், ரன்வீர் சிங் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

தாடியைப் பிடிக்கும்....
இந்த ஆய்வில், 63.3 சதவீதம் பேர் சிறிதளவு தாடியுடன் கூடிய முரட்டுத் தோற்றத்தை விரும்புவதாகவும், 36.7 சதவீதம் பேர் முழுவதுமாக முகச் சவரம் செய்யபப்ட்ட முகத்தை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முரட்டு ஆண்கள்...
இந்த ஆய்வின் மூலம் தற்காலத்து பெண்கள் கரடுமுரடான, உடற்கட்டான ஆண்களையே மிகவும் விரும்புகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











