நயன்தாரா திருமணத்துக்காக சென்னைக்கு டிக்கெட் போட்ட ஷாருக்கான்.. மகாபலிபுரமே சும்மா மிரள போகுது!
சென்னை: இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ள நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ஜூன் 9ம் தேதிக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ஷெரட்டன் பார்க்
திருப்பதியில் நடைபெற்றால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் ஜூன் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது. அதற்காக அந்த ஹோட்டலில் 100 காஸ்ட்லியான அறைகளும் புக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி முதல் அஜித் வரை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா, அட்லி உள்ளிட்ட பலருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 பேர் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 10ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் பங்கேற்பு
கோலிவுட் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி நயன்தாராவின் திருமணத்தில் மற்ற மொழி நடிகர்களும் சினிமா பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நாளை நடைபெற உள்ள நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும், அதற்காக அவர் பிளைட் டிக்கெட் புக் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷாருக்கானுக்கு ஜோடியாக
தென்னிந்திய திரையுலகில் ரஜினி முதல் மம்மூட்டி வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் ஷாருக்கான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்க போவதாகவும் கூறுகின்றனர்.

ஏகப்பட்ட ஏற்பாடு
தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்பதால் மிகப்பெரிய அளவில் ஏகப்பட்ட ஏற்பாடுகளை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செய்துள்ளனர். தண்ணீர் பாட்டில் முதல் நெட்பிளிக்ஸில் திருமணம் டெலிகாஸ்ட் வரை என பல சிறப்பம்சங்கள் களைகட்டுகின்றன.


Click it and Unblock the Notifications











