Jawan Box Office: 700 கோடி இன்னும் வரமாட்டேங்குதே!.. ஜவான் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீசாகி 8 நாட்கள் ஆகிய நிலையில், இன்னமும் 700 கோடி வசூலை எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை கோலிவுட்டில் இயக்கிய அட்லீ பாலிவுட்டில் அதுவும் ஷாருக்கான் படத்தை பண்ணிவிட்டு தான் திரும்புவேன் என மும்பைக்கு கிளம்பிச் சென்றார்.

அட்லீ உழைப்புக்கு பலன்: சுமார் 4 ஆண்டுகள் அதற்காக அட்லீ செலவிட்ட நிலையில், அதற்கான பலன் தற்போது அவருக்கு கைமேல் கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஷாருக் கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, மற்றும் சில பாலிவுட் நடிகர்களை வைத்து ஜவான் படத்தை கருத்து மற்றும் கமர்சியல் எண்டர்டெயினர் திரைப்படமாக கொடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை அதிகாரபூர்வமாக 696.67 கோடி ரூபாயை வசூலித்து இருப்பதாக ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் மற்றும் இயக்குநர் அட்லீ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பிகிலை விட டபுள் வசூல்: தளபதி விஜய்யை வைத்து அட்லீ கடைசியாக இயக்கிய பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது இமாலய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

Shah Rukh Khans Jawan Day 8 official Box Office Reports are here

வார இறுதி நாட்களிலும் உலகம் முழுவதும் தினமும் சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டி வருகிறது ஜவான் திரைப்படம். வெள்ளிக்கிழமையான இன்று முதல் மீண்டும் ஜவான் திரைப்படத்தின் வசூல் வேட்டை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை (விநாயகர் சதுர்த்தி) என இரண்டாவது வாரம் மிகப்பெரிய லாங் வீக் எண்டாக உள்ள நிலையில் ஷாருக்கான் காட்டில் பண மழை தான் கொட்டும் என்கின்றனர்.

இரண்டாவது வாரம் முடிவில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 900 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலேயே பதான் திரைப்படத்தின் 1000 கோடி வசூலை ஜவான் திரைப்படம் முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X