நயன்தாராவை அலேக்கா தூக்கிய ஷாருக் கான்..அட்லீயை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டில் ஷாருக் கான், நயன்தாராவை தூக்கிய சுற்றியதைப் பார்த்து டென்ஷனான ரசிகர்கள் அட்லீயை திட்டி வருகின்றனர்.
இயக்குனர் அட்லீ, தளபதி விஜய்யை வைத்து கடைசியாக இயக்கிய பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் உருவாக்கி உள்ள ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ஷாருக்கானின் ஜவான்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜவான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து. தற்போது, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறது. இப்படத்தில், நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார்.
முதல் சிங்கிள்: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் 'வந்த இடம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலே வலைதளத்தில் டிரெண்டானது. அதனைத் தொடர்ந்து ஜவான், படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாக உள்ளது.
விக்னேஷ் சிவன் பாவம் இல்லையா: ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அட்லீ தனது ட்வீட்டரில் வீடியோவை வெளியிட்டு இருந்தார். ரொமான்டிக் பாடலான அந்த பாடலில் நயன்தாராவை ஷாருக் கான் அலேக்காக தூக்கி சுற்றுகிறார். இதைப்பார்த்த நயன்தாரா ரசிகர்கள், நயன்தாராவை தூக்கி சுற்றும் வாய்ப்பு தமிழ் நடிகர்களுக்கே இல்லை அட்லீ என்றும், திருமணமான நடிகையை இப்படி செய்யலாமா, விக்னேஷ் சிவன் பாவம் இல்லையா என்று அடுத்தடுத்த கமெண்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.
இரண்டாவது சிங்கிள்: அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் இரண்டாவது பாடலை ஹிந்தியில் அர்ஜிர்த் சிங் மற்றும் சில்பாராவும், தெலுங்குவில் ஆதித்யா ரக்கே மற்றும் பிரியாஹிமேஷும், தமிழில் அனிருத்தும் பாடி உள்ளனர். இந்தப் பாடல் தமிழில் 'ஹய்யோடா' என்றும், தெலுங்குவில் 'சலோனா' என்றும், ஹிந்தியில் 'சலேயா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











