King: சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. ஷாருக்கானின் ‘கிங்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது!

மும்பை: பதான் படத்தை இயக்கி ஷாருக்கானுக்கு கம்பேக் வெற்றியை கொடுத்த இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான் நடித்துள்ள 'கிங்' (King) திரைப்படத்தின் அட்டகாசமான க்ளிம்ப்ஸ் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களயும் கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது.

கடந்த ஆண்டு பாலிவுட்டுக்கு சாவ்வா, துரந்தர் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய படையலையே போட்டாலும், அதற்கு முன்னதாக ஒரே வருடத்தில் பதான், ஜவான், டன்கி என 2500 கோடி வசூலை திருப்பதி உண்டியல் போல கொட்டியது நம்ம ஷாருக்கான் பாய் தான்.

Shah Rukh Khan s King Movie Release date announced with a fiery glimpse

சல்மான் கான் மற்றும் அமீர்கான் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், மீண்டும் கிங்காக கிங் கான் ஷாருக்கான் இந்த ஆண்டு சம்பவம் செய்ய ரெடியாகி விட்டார்.

கிங் ரிலீஸ் தேதி: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு கிங் படத்தை டிசம்பர் 24ம் தேதி வெளியிட போகிறோம் என படக்குழு அட்டகாசமான ஷாருக்கானின் க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான் பனிமலைகள் கொண்ட சிகரத்தின் மீது சிங்கம் போல கர்ஜிக்கும் காட்சியும் ஒரு கண்ணாடி மாளிகையை உடைத்துக் கொண்டு ரத்த வெள்ளத்துடன் குதித்து வில்லனை துவம்சம் செய்யும் சீனை வெளியிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பக்கா ட்ரீட்: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனநாயகன், ஜெயிலர் 2, கர, கருப்பு, எல்ஐகே, சர்தார் 2 என ஏகப்பட்ட ட்ரீட் உள்ள நிலையில், பாலிவுட் ரசிகர்களுக்கும் துரந்தர் 2, ராமாயணா, கிங் என பிரம்மாண்ட படங்கள் உள்ளன. கன்னட ரசிகர்களுக்கு யஷ் நடித்துள்ள டாக்ஸிக் காத்திருக்கும் நிலையில், மலையாள ரசிகர்களுக்கு மோகன்லால், மம்மூட்டி நடித்துள்ள பாட்ரியாட் படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

கிங் இஸ் பேக்: 2023ம் ஆண்டு ஷாருக்கான் நடித்த பதான் படம் வெளியாகி சில ஆண்டுகள் ஓய்வில் இருந்த ஷாருக்கானுக்கு பெரிய ஆண்டாக அமைந்தது. அதே போன்ற ஒரு மேஜிக் இந்த ஆண்டும் நடைபெற உள்ளது. ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X