அட அசத்துதே... தனது படங்களின் காட்சிகளை இணைத்து நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
மும்பை: தனது படங்களின் கிளிப்பிங்ஸை இணைத்து, நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் பலருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
படப்பிடிப்பு ரத்து
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நடிகர், நடிகைகள் வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி
இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பாலிவுட் பாட்ஷா
அதை ஏற்று மக்கள் ஊரடங்கை நேற்று கடைபிடித்தனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். எதையும் வித்தியாசமாக யோசிக்கும் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக் கான், கொரோனா விழிப்புணர்வுக்காக, தனது படங்களின் காட்சிகளை இணைத்து, ஐந்து நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளார். என்னென்ன அறிகுறிகள் வரும் என்பதை தனது படத்தில் இருந்து எடுத்துக்காட்டி வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ, வைரலாகி வருகிறது.
Recommended Video

தனித்திருங்கள்
அதில், கொரோனா பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் டாக்டரை பாருங்கள். மற்றவர்களிடம் இருந்து தனித்திருங்கள். கூட்டமாகச் செல்வதைத் தவிருங்கள். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவங்கர்களைத் தொடாதீர்கள். உங்கள் முகத்தை தொடாதீர்கள், பொதுபோக்குவரத்தை தவிர்த்திடுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள், உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்தால், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











