ஷாஹித் கபூர் - விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள தொடர். இதில் கபூர், விஜய் சேதுபதி, கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
இத்தொடர் குறித்து இயக்குனர்கள் ராஜ் & டிகே கூறுகையில், எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கி இருக்கிறோம்.

தி ஃபேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம். பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் தொடரை பார்ப்பதற்காக நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்." இந்தியில் உருவாகியுள்ள இத்தொடர் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











