கர்ப்பம் விஷயத்தில் சொன்ன மாதிரியே செய்து காட்டிய வாரிசு நடிகரின் மனைவி

By Siva

மும்பை: நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட் சொன்னது போன்றே செய்துவிட்டார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிஷா என்ற மகளை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் மீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

உடைகள்

உடைகள்

மீரா ராஜ்புட்டின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் வயிறு பெரிதாக இருப்பதாகவும், அவர் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்றும் கூறி வந்தனர்.

கர்ப்பம்

கர்ப்பம்

ரசிகர்கள் கணித்து வந்த நிலையில் மீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை ஷாஹித் கபூர் உறுதி செய்துள்ளார். மிஷாவுக்கு அருகே அக்கா என்று எழுதி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஷாஹித். அதை பார்த்தவர்கள் தங்களின் கணிப்பு சரியாகிவிட்டதை தெரிந்து கொண்டனர். மீராவும் ஷாஹித் வெளியிட்ட அதே புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வேலை

வேலை

இரண்டு குழந்தைகள் பெற விரும்புகிறேன். சீக்கிரமே இரண்டாவது குழந்தையையும் பெற்றுவிட்டால் வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும். வீட்டை கவனித்துக் கொள்ள நேரம் கிடைக்கும் வேலையாக தான் செய்வேன் என்று மீரா முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

வாழ்த்து

வாழ்த்து

ஷாஹித் கபூர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து குழந்தை பெற்றுவிட்டு அதன் பிறகு ஃப்ரீயாக இருக்க வேண்டும் என்று சொன்னது போன்றே செய்துவிட்டார் மீரா என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X