சொகுசு வீடு வாங்கிய வாரிசு நடிகர்: விலையை கேட்டால் தலையே சுத்திடும்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் ரூ. 56 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர்களுக்கு மிஷா என்ற மகள் உள்ளார். வீட்டிற்கு புதிய வரவு வரவிருக்கும் நேரத்தில் ஷாஹித் புது வீடு வாங்கியுள்ளார்.

மும்பை வோர்லி பகுதியில் டூப்ளெக்ஸ் வீடு வாங்கி பதிவு செய்துள்ளார்.

ஷாஹித்

ஷாஹித்

கடலை பார்த்தபடியே இருக்கும் டூப்ளெக்ஸ் வீடு 42 மற்றும் 43வது மாடியில் அமைந்துள்ளது. அந்த வீடு 8 ஆயிரத்து 625 சதுர அடியில் அமைந்துள்ளது. வீட்டை ரூ. 55.6 கோடிக்கு வாங்கியுள்ள ஷாஹித் ரூ. 2.91 கோடி ஸ்டாம்ப் டியூட்டி கொடுத்து பதிவு செய்துள்ளார். ஷாஹித்தின் புது வீடு பற்றி தான் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

மீரா

மீரா

ஷாஹித் வாங்கியுள்ள டூப்ளெக்ஸ் வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு அவர் தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாஹித்துக்கு 6 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி அளிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் சொகுசு வீடுகள் வாங்கி வரும் நேரத்தில் ஷாஹித்தும் வாங்கியுள்ளார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

ஷாஹித் அந்த வீட்டை வாங்க ஜூன் 27ம் தேதி முடிவு செய்து ஜூலை 12ம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். பத்திரம் ஷாஹித் மற்றும் மீரா பெயரில் உள்ளது. அவர் வீடு வாங்கியுள்ள அதே வளாகத்தில் நடிகர் அக்ஷய் குமாரும் வீடு வாங்கியுள்ளார். அதே வளாகத்தில் அபிஷேக் பச்சன் ரூ. 42 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார். மேலும் தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ் 50வது மாடியில் ரூ. 120 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ப்ரியங்கா சோப்ரா அண்மையில் தான் ரூ. 100 கோடிக்கு வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் ப்ரியங்காவின் காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் கலந்து கொண்டார். ஒரு காலத்தில் ப்ரியங்காவை காதலித்த ஷாஹித் கபூரும் தற்போது பல கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X