கோவாவில் பிகினி பெண்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாஹித் கபூர்!

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது 31வது பிறந்தநாளை நேற்று கோவாவில் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பற்றி தான் பாலிவுட் முழுவதும் பேச்சு. அப்படி என்ன செய்துவிட்டார் என்று யோசிக்கிறீர்களா? கோவாவில் அரை நிர்வாணமாக வெறும் பிகினி மட்டுமே அணிந்த பெண்களுடன் கிளு, கிளுப்பாய் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் ஷாஹித்.
அந்த படங்களில் சிலவற்றை அவரது போட்டோகிராபர் அதுல் கஸ்பிகர் டுவிட்டரில் வெளியிட்டுவிட்டார். அது தான் தற்போது இணையதளத்தில் ஹாட் பிக்சர்ஸ். அவரது பிறந்தநாள் விழாவில் தபு, நர்கிஸ் பக்ரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிரியங்கா சோப்ராவைப் பிரிந்த ஷாஹித் தற்போது நர்கிஸ் பக்ரியுடன் சுற்றுவதாகப் பேச்சு அடிபடுகிறது. அவரது பிறந்தநாள் விழாவுக்கு முன்னாள் காதலியான பிரியங்காவை அழைக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுதான் இத்தனை பிகினிகளை அழைத்து விட்டாயிற்றே, பிரியங்காவை வேறு தனியாக அழைக்க வேண்டுமா என்ன...!


Click it and Unblock the Notifications











