ரீமேக் படத்தில் நடிக்க பட்ஜெட்டை விட அதிக சம்பளம் கேட்கும் ஹீரோ?

By Siva

மும்பை: ஜெர்சி பட ரீமேக்கில் நடிக்க ஷாஹித் கபூர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.

விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். கபிர் சிங் ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

வசூலில் அர்ஜுன் ரெட்டியை தோற்கடித்த கபிர் சிங் படம் மூலம் ஷாஹித் கபூரின் கெரியர் உச்சத்தை தொட்டுள்ளது. கபிர் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிறகு ஷாஹித் கபூர் தனது சம்பளத்தை ரூ. 35 கோடியாக உயர்த்தியுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெர்சி தெலுங்கு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

ஜெர்சி ரீமேக்கில் நானி கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியுள்ளனர். அவரோ ரூ. 40 கோடி சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்கிறாராம். ஜெர்சி ரீமேக்கின் மொத்த பட்ஜெட்டே ரூ. 30 கோடி தான். இந்நிலையில் பட்ஜெட்டை விட அதிக சம்பளம் கேட்கிறார் ஷாஹித். அதனால் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் நடிகர்கள் சிலர் பாலிவுட்டில் இருக்கிறார்கள். அதில் யாராவது ஒருவரை நடிக்க வைத்தாலும் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கபிர் சிங் வெற்றியால் ஷாஹித் கபூருக்கு தலைக்கனம் ஏறிவிட்டதாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

கபிர் சிங்

கபிர் சிங்

ஷாஹித் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் கபிர் சிங் போன்று ஒரு மெகா வெற்றிப் படத்தை கொடுத்தது இல்லை. முதல் முறையாக பெரிய வெற்றியை பார்த்ததும் மனிதர் தலை, கால் புரியாமல் ஆடுகிறார் என்று பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

ஜெர்சி படத்தை தமிழிலும் ரீமேக் செய்கிறார்கள். அந்த ரீமேக்கை நடிகர் ராணா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் ரீமேக்கில் யார் ஹீரோ என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஜெர்சி படத்தில் நானியை பார்த்தபோது எல்லாம் நம்ம சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் அம்சமாக இருக்குமே என்று தான் தோன்றியது. அர்ஜுன் ரெட்டி படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் த்ருவ் விக்ரமை வைத்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு தெலுங்கு படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X