பேசுனபடி விருது கொடுக்கல.. கோபத்தில் கொந்தளித்த ஹீரோ.. நடனமாடாமல் பாதியிலேயே மூட்டையை கட்டினார்!
நடிகர் ஷாஷித் கபூருக்கு விருது மறுக்கப்பட்ட விஷயம் தெரியவந்துள்ளது.
மும்பை: தனக்கு விருத்து வழங்காததால் ஆத்திரமடைந்த நடிகர் ஷாகித் கபூர், விருது வழங்கும் விழாவில் நடனமாடாமல் பாதியிலேயே கிளம்பிய விஷயம் தெரியவந்துள்ளது.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஷாஹித் கபூர். தெலுங்கு சூப்பர் ஹிட் படம் அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கில் இவர் தான் ஹீரோ.
கபிர் சிங் திரைப்படம் பாலிவுட்டில் வசூல் மழை பொழிந்தது. ரூ.280 கோடி வரை படம் வசூலித்தது. அது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரறேப்பை பெற்றது.

விருது ஒப்பந்தம்
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிரபல விருது வழங்கும் விழாவில், ஷாஹித் கபூருக்கு கபிர் சிங் படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகர் பாப்புலர்' எனும் விருது வழங்குவதாக அவரிடம் விழா ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்திருந்தனர். அதற்கு கைமாறாக விழாவில் ஷாஹித் கபூர் நடனமாடுவது என முடிவு செய்யப்பட்டது.

கடைசி நேரத்தில் ஏமாற்றம்
ஆனால் விழாவில் கடைசி நேரத்தில் 'சிறந்த நடிகர் பாப்புலர்' விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட்டு விட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த ஷாஹித் கபூர், விழாவில் பெர்பாமென்ஸ் செய்யாமலேயே கோபத்துடன் கிளம்பி சென்றுவிட்டாராம்.

பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்
இந்த விவகாரம் தான் பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஷாஹித் கபூருக்கு விருது வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் அதை மாற்றியது ஏன் என்பது தெரியவில்லை.

வியாபார விருதுகள்
இப்போது எல்லாம் பல விருது விழாக்கள் வியாபாரத்துக்காக நடத்தப்படுபவை என்பது இந்த சம்பவத்தின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. முன் எல்லாம் விருது வாங்குவது தான் ஒரு நடிகருக்கு மிகச் சிறந்த கவுரமாக இருக்கும். ஆனால் இப்போது அதற்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











